செலவு கட்டுப்படியாகல… கதறும் ஆளுங்கட்சி கவுன்சிலர்
செலவு கட்டுப்படியாகல… கதறும் ஆளுங்கட்சி கவுன்சிலர்
“தளபதி பிறந்தநாள், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள், கலைஞர் நூற்றாண்டு விழானு அடுத்தடுத்து கட்சி நிகழ்ச்சிகள் கழக பொதுக்கூட்டங்கள்னு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கு. இதுல முதல்வர் மாவட்டத்துக்கு வந்தாருனா அவருக்கு வரவேற்பு கொடுக்கனும். போற வர்ற வழியில கொடி கட்டனும், பேனர் கட்டனும். தொண்டர்களை திரட்டி நிப்பாட்டனும்னு ஏகப்பட்ட செலவு வருது. ஆனா, வருமானத்துக்குத்தான் வழியில்லாம இருக்கு.
இந்த நிலைமையில எம்.பி. எலக்சனுக்கு இப்பவே ஆலோசனைக்குழு கூட்டத்தை வேற கூட்டனும்னு கட்சியில சொல்லியிருக்காங்க. கவுன்சிலரா இருந்துகிட்டு இவ்ளோ செலவையும் எப்படிதான் சமாளிக்கிறது சொல்லுங்க? கொடுக்கல் வாங்கல் எல்லாம் மேல் மட்டத்துக்குள்ளேயே முடிச்சுக்கிறாங்க. கவுன்சிலர்கள கண்டுக்கிறதே இல்லை.
ஆனா, களப்பணியில நாங்கதான் முன்னாடி நிக்கனும். இந்த லட்சணத்துல, உள்ளூர்ல கட்சிகாரன் கல்யாணம், காதுகுத்து, கருமாதினு அதுக்கும் நாங்க போயி நின்னாகனும். தலையாச்சும் காட்டியாகனும். செலவு கட்டுபடியாகலை.
பேசாம, அடுத்த எலக்சன்ல சுயேச்சையா நின்னுறலானு தோனுது. ஒரே செலவோட போயிரும்ல”னு போற வர்ற கழக உடன்பிறப்புகள்கிட்ட எல்லாம் புலம்பித் தீர்க்கிறாராம் அந்த கரைவேட்டி கவுன்சிலரு.
மேலும் செய்திகள் படிக்க:
https://angusam.com/governor-vs-chief-minister-started-a-power-struggle/
அங்குசம் யூடியூப்
https://youtube.com/@AngusamSeithi