அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் அமைப்பின் சார்பில் 2ம் ஆண்டு தேர் திருவிழா!

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் அமைப்பின் சார்பில் 2ம் ஆண்டு தேர் திருவிழா!

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு ஸ்ரீ ஜெகந்நாத் ரத யாத்திரை எனும் தேர் திருவிழா திருச்சியில் வரும் சனிக்கிழமை 24 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கலைஞர் அறிவாலயம் பகுதியில் இருந்து தொடங்குகிறது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

HARINI JEWELLERS TRICHY

அப்போது திருச்சி ஸ்ரீரங்கம் இஸ்கான் அமைப்பின் பொது மேலாளர் நந்த புத்ர தாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது ரத யாத்திரை எனும் தேர் திருவிழா தொன்று தொட்டு ஒரிசாவில் ஜெகந்நாத் புரியிலும் மற்றும் பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது. திருச்சி மையங்கள் சார்பில் திருச்சி மாநகரில் இரண்டாம் ஆண்டாக உலக அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தினை மேம்படுத்தும் வகையில் இவ்விழா நடைபெறுகிறது.

நவீன தொழில்நுட்பமும் பண்டைய பாரம்பரியமும் கொண்ட இந்த நவீன தேரில் ஏர் பிரேக்குகள், சஸ்பென்ஷன், 12 அடி முதல் 18 அடி வரை ரதத்தின் விமானம் மேல் நோக்கி இருக்கும் வகையில் அமையப்பெற்ற தேரில் வடம் பிடிக்க ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக பங்கேற்று சுமார் 300 பேர் தேரினை இழக்கும் வகையில் உறுதியான 65 அடி நீள கயிறுடன் உள்ளது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் ரத யாத்திரை கலைஞர் அறிவாலயம் பகுதியில் இருந்து தொடங்குகிறது. பொதுமக்கள் ரதத்தினை இழுத்து பக்தி திருவிழாவில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம் என்று தெரிவித்தார் மேலும் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீரங்கம் இஸ்கான் வளாகத்தில் மங்கள ஆரத்தி ,குருபூஜை, ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு, சாதனை விருதுகள், யோகா ஆரத்தி கீர்த்தன மேலா ஆகியவை நடைபெறும் என்று தெரிவித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது நிர்வாகிகள் பத்ரிநாத் விக்ரம் நித்தியானந்தா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.