“காட்சியில் தெளிந்தனம்” கவிதை நூல் வெளியீட்டு விழா !
க்ரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் திரு.ஜான் பீட்டர் எழுதிய “காட்சியில் தெளிந்தனம்” கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நூலினை கலைக் காவிரி பேராசிரியர் கவிஞர் கி.சதீஷ் குமரன் வெளியிட்டார் முதல் படியினை வழக்குரைஞர் மார்ட்டின் பெற்றுக்கொண்டார் இந்நிகழ்வில் நாகமங்கலம் கிராமப் பஞ்சாயத்து தலைவர் திருமிகு வெள்ளைச்சாமி தலைமை வகித்தார்.
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் திருமிகு. சதிஷ்குமரன் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மூத்த வழக்கறிஞர் திருமிகு. மார்ட்டின். மரபுக்கவிஞர்.வீரா.பாலச்சந்திரன். மூத்த பத்திரிக்கையாளர் திருமிகு. ஜவஹர் ஆறுமுகம். PAT தொண்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திருமிகு ஸ்டீபன்.
அகில இந்திய வானொலியின் செய்தி வாசிப்பாளர் .திருமிகு சத்ய நாராயணன். ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் மொழிப்போர் தியாகி. திருமிகு பனிமயம். ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
மாணவர்கள் செல்வன்.சகாயராஜ், செல்வி. கிருத்திகா நூல் குறித்து உரையாற்றினர். நிறைவாக நூலாசிரியர் திரு. ஜான் பீட்டர் ஏற்புரையாற்றி நன்றி கூறினார். முன்னதாக திருமதி.கிறிஸ்டி சுபத்ரா வரவேற்புரையாற்றினார்.
நிகழ்வை திருமதி R.சாந்தி தொகுத்து வழங்கினார்.