இரட்டை ஊதிய முறையை ரத்துச் செய்யக்கோரி சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம்
இரட்டை ஊதிய முறையை
ரத்துச் செய்யக்கோரி
சர்க்கரை ஆலை ஊழியர்கள்
உண்ணாவிரதம்
சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு இடையேயான இரட்டை ஊதிய முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாக வளாகத்தில் அதன் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை சர்க்கரை ஆலைகளில் நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை குருங்குளம் சர்க்கரை ஆலை ஊழியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இக் கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக மாநில அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சர்க்கரை ஆலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.