நான்காம் ஆண்டில் ‘இந்தியன் -2’ நாக்குத் தள்ளிய சுபாஸ்கரன்!
நான்காம் ஆண்டில் ‘இந்தியன் -2’ நாக்குத் தள்ளிய சுபாஸ்கரன்!
2020 ஜனவரியில் கமல்-ஷங்கர் காம்பினேஷனில் ‘இந்தியன் -2’ ஷூட்டிங் ஸ்டார்ட் ஆனது. பிப்ரவரியில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விபத்து, மார்ச்சில் கொரோனா விபத்து, அதன்பின் கமல்-ஷங்கருக்கிடையே முட்டல்-மோதல்-உரசல் பஞ்சாயத்து நடந்து, உதயநிதி ஸ்டாலினால் பஞ்சாயத்து ஓய்ந்து, ஸ்ஸ்ஸ்….ஸ்ஸப்பாடா என பெருமூச்சை பெருசாகவிட்டுவிட்டு, ஷூட்டிங்கை ஆரம்பித்தார், தயாரிப்பாளர் லைக்கா சுபாஸ்கரன்.
”இந்த 2023 ஜூன் வரை தான் என்னோட கால்ஷீட், அதற்கு மேல் நோ” என கமலும் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார். இதையெல்லாம் கடந்த இரு இதழ்களுக்கு முன்பு நமது அங்குசத்தில் எழுதியிருந்தோம். இப்ப என்னடான்னா, ‘இன்னும் 25 நாள் கமல் கால்ஷீட் கொடுத்தாருன்னா ’இந்தியன் -3’ ஐயும் சேர்த்து எடுத்துருவேன்” ஷங்கர் சைடிலிருந்து சோஷியல் மீடியாக்களில் நியூஸைக் கசியவிட ஆரம்பித்துவிட்டார்கள்.
இதைக் கண்டதும் கேட்டதும் அலறிவிட்டாராம் சுபாஸ்கரன். ஏன்னா ‘இந்தியன் -2’ ஷூட்டிங் முடியவே ஆகஸ்ட் மாசமாகுமோ? செப்டம்பர் மாசமாகுமோ? அதுக்குப் பிறகு போஸ்ட் புரொடக்ஷனுக்கு எப்படியும் அஞ்சாறு மாசம் ஆக்கி, நம்மையும் ஒருவழியாக்கி, ஒருவழியா 2024 மார்ச் மாசமோ, ஏப்ரல் மாசமோ தான் ரிலீசாக்குவாரு ஷங்கர்.
அந்த நேரம் ஐபிஎல் ஸ்டார்ட் ஆகும். நமக்கும் நாக்குத் தள்ளிப்போகும்” என்ற படபடப்பில், எப்படியாவது 2024 பொங்கலுக்கோ அல்லது பிப்ரவரி மாசத்திலோ ‘இந்தியன் -2’வை ரிலீஸ் பண்ணும் வேலைகளை ஸ்பீட் பண்ணுங்க” என லைக்காவின் சி.இ.ஓ.தமிழ்க்குமரனிடம் சொல்லி வருகிறாராம் சுபாஸ்கரன்.
நாலு வருசமா ஒரு படத்தை…, அதுவும் மெகா ஹீரோ- மெகா டைரக்டர்(?) படத்தை எடுத்தா, அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நாக்குத் தள்ளாம என்ன செய்யும்?
-மதுரை மாறன்