துறையூர் சின்ன ஏரியில் குடிபோதையில் இறங்கிய ஆசாமியால் பரபரப்பு.
துறையூர் சின்ன ஏரியில் குடிபோதையில் இறங்கிய ஆசாமியால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் பேருந்து நிலையம் எதிரில் சின்ன ஏரி உள்ளது இதில் எப்பொழுதும் நீர் இருந்து கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் துறையூர் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த சின்ன ஏரி தற்போது மாசுபட்டு நகரின் பல்வேறு இடங்களில் இருந்து கழிவுநீர்கள் சூழ மிகவும் அசுத்தமான நிலையில் இருந்து வரும் நிலையில், இன்று 27.08.2023 மாலை சுமார் மூன்று மணி அளவில் குடிபோதையில் ஒரு ஆசாமி போதை தலைக்கேறிய நிலையில் திடீரென சின்ன ஏரிக்குள் இறங்கி செல்ல ஆரம்பித்தார் இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் அவரை ஏரியை விட்டு மேலே வருமாறு கூச்சலிட்டனர்.
அதனை பொருட்படுத்தாது சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக ஏரியின் நீரில் மூழ்குவதும் பின்பு அதில் நீச்சல் அடிப்பதும். நடு ஏரியில் சென்று நிற்பதும் நடந்து செல்வதுமாக இருந்து வந்தார்.வெகு நேரமாக ஏரிக்குள் போவதும் வருவதுமாக போக்கு காட்டிக் கொண்டிருந்த போதை ஆசாமியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்ப்பதற்காக கூட்டம் கூட ஆரம்பித்தது.
மேலும் இது பற்றி துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கும் காவல் நிலையத்திற்கும் பொதுமக்கள் தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் சின்னேரிக்கு வந்த போலீசாரம் தீயணைப்பு துறையினரும் போதை ஆசாமியை மேலே வரும்படி அழைத்தனர். போலீசாரையும் தீயணைப்புத் துறையினரின் கண்ட போதை ஆசாமி திடீரென சுதாரித்த நிலையில் கரைக்கு திரும்ப ஆரம்பித்தார்.
அவரை ஏரியின் பக்கவாட்டில் நின்றவாறு காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார் மற்றும் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள்போதை ஆசாமியை ஏரியிலிருந்து சாமர்த்தியமாக பேசி வெளியே வரச் செய்தனர். மீட்கப்பட்ட ஆசாமியை தீயணைப்புத் துறையினர் தங்களது வண்டியில் இருந்து நீரின் மூலம் சுத்தப்படுத்தி அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைத்தனர்.
முன்னதாக போதை ஆசாமியிடம் விசாரித்த போலீசாரிடம், “தனது பெயர் பத்மநாபன் வயது 27 என்றும் ‘ T களத்தூர் அருகிலுள்ள நத்தப்பாடி என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும். ஏரியில் யாரோ விழுந்து விட்டார்கள் அவரை மீட்பதற்காக சென்றேன்” என்றும் கூறினார் .போதை ஆசாமி கூறிய விளக்கத்தை கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் சிரித்தபடி அங்கிருந்து கலைந்து சென்றனர் .சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஏரிக்குள்ளேயே போக்கு காட்டி வந்த ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
– ஜோஸ்