விமல் –சூரியின் ‘படவா’ டிரைலர் ரிலீஸ் மேட்டர்ஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விமல் –சூரியின் ‘படவா’ டிரைலர் ரிலீஸ் மேட்டர்ஸ்!

நடிகர்கள் விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர். சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

‘படவா’ ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு. இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் பீட்டர் பேசியதாவது… அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்தப் படத்தில் சூரி சார் பெரிய கேரக்டர் செய்துள்ளார். அவர் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவரையும் வாழ்த்த வரவேற்கிறேன்.

Badava (2023) Movie
Badava (2023) Movie

கவிஞர் இளையகம்பன் பேசியதாவது…’படவா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். என் அருமை இசையமைப்பாளர் ஜான் பீட்டர் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அவரது பெரிய முயற்சியில் உருவாகின்ற ‘படவா’ திரைப்படம் ஒரு அற்புதமான திரை சூழலை உருவாக்கி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இந்த திரைப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. அனைத்து பாடல்களையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த திரைப்படத்தின் முகப்புப் பாடலை நான் எழுதியிருக்கின்றேன். பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக அமைந்திருக்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துகள்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

கலை இயக்குநர் சரவண அபிராமன் பேசியதாவது…அனைவருக்கும் வணக்கம், படவா திரைப்படத்தில் நவரசங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன‌. இந்த படத்திற்கு இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் ஜான் பீட்டர் அவர்கள் தான். விமல் மிகப்பெரிய நடிகர், இந்த திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், சூரி அவர்களுக்கும் இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.

ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் பேசியதாவது…இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படம் மிகவும் நன்றாக உருவாகி உள்ளது. என் உடனிருந்த அனைவருக்கும் நன்றி.

Badava (2023) Movie
Badava (2023) Movie

இயக்குந‌ர் சரவணன் சக்தி பேசியதாவது… இது மிகப்பெரிய சமூக பொறுப்புள்ள படம். விவசாயம் பற்றி இது பேசுகிறது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரை அனைவரும் சிறப்பான பங்களித்துள்ளனர். நானும் இந்த படத்தில் ஒரு ரோல் செய்துள்ளேன். படம் மிகப்பெரிய வெற்றிபெற எல்லாம் வ‌ல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

நடிகர் சவுந்திரராஜா பேசியதாவது… அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நான் நான் நடிக்காவிட்டாலும் விமலுக்காக வந்திருக்கிறேன். விவசாயம் குறித்த‌ கருத்து இதில் இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக நன்றாக ஓட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் வணக்கம்.

கதாநாயகி ஸ்ரீதா பேசியதாவது… அனைவருக்கும் வணக்கம்,. மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி. இயக்குந‌ர் நந்தா அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கு சுத்தமாக‌ தமிழ் தெரியாது. அவரால் தான் நான் தமிழ் வசனம் பேசி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி .

கதாநாயகன் விமல் பேசியதாவது… மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தின் இயக்குந‌ர் நந்தா அவர்களுக்கும் நன்றி. அன்பு நண்பன் சூரி அவர்களுக்கும், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்களுக்கும் நன்றி.

விஜய் ஆண்டனி பேசியதாவது… ஜான் பீட்டர் மற்றும் கதாநாயகன் விமல் அவர்களுக்கு வணக்கம். கண்டிப்பாக நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். கதாநாயகன் விமல் நடிகர் சூரி சார் காம்போ நன்றாக இருக்கும். இது நல்ல திரைப்படமாக கட்டாயம் அமையும்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.