சமயபுரம் கோயில் தங்க தகடுக்கு என்ன தான் ஆச்சு ! …

0

சமயபுரம் கோயில் தங்க தகடுக்கு என்ன தான் ஆச்சு ! …

தமிழகத்தின் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் இணை ஆணையராக கல்யாணி என்பவர் இருந்து வருகிறார்.

2 dhanalakshmi joseph

இக்கோவிலுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விசேஷ நாட்கள் மற்றும் அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கோவிலுக்கு வந்து மாரியம்மனைத்தரிசனம் செய்து செல்வர்.

சமயபுரம் கோவில்
சமயபுரம் கோவில்
- Advertisement -

- Advertisement -

இங்கு வரும் பக்தர்கள் உண்டியல்கள் மூலம் காணிக்கையாக அளித்து மாதத்திற்கு 2 முறை எண்ணப்படும் போது முடிவில் தங்கம், வெள்ளி கிலோ கணக்கிலும், கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் வெளிநாட்டினர் தங்களின் நாடுகளின் பணத்தையும் காணிக்கையாக அளித்து வருவதில் தமிழக கோவில்களிலேயேஅதிக வருமானம் வருவதில் முதன்மைக் கோவிலாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் மாரியம்மனின் கருவறை கோபுரத்தில் உள்ள தங்கத் தகடுகள் மெருகு குலைந்து சுற்றிலும் பெரும்பாலான இடங்களில் தங்க நிறங்கள் காணாமல் போய் கறுப்பு நிறம் படிந்து களை இழந்து காணப்படுகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூலஸ்தான கோபுரத்தில் தங்கத்தகடுகள் பொருத்தப்பட்டு கலைநயத்துடன் காட்சியளித்த மூலஸ்தான தங்க கோபி மாதங்களிலேயே அதன் பொழிவை இழந்துவிட்டது. இதற்கு அப்போதே தரம் குறைந்த தங்கத்தகடுகள் கோபுரத்தில் பொருத்தப்பட்டதாக பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

4 bismi svs
சமயபுரம்..
சமயபுரம்..

தற்போது பல வருடங்கள் கடந்தும் எந்த பராமரிப்பும் இன்றி முன்பு இருந்ததைப் போலே களையிழந்து காணப்படுகிறது. பொது தரிசனமற்றும் கட்டண தரிசனம் இவற்றில் மாரியம்மனைத் தரிசனம் செய்யும் பக்தர்கள் அடுத்ததாக மூலஸ்தான கோடிரத்தைத் தான் கண்டு வணங்குவர்.

கருவறையில் சர்வ அலங்காரத்துடன் உள்ள மாரியம்மனை மன நிறைவோடு தரிசனம் செய்யக்கூடிய பக்தர்கள், அடுத்தததாக மூலஸ்தான கோபுரத்தை தரிசனம் செய்யும்போது மிகுந்த மனவருத்ததுடன்தான் தரிசனம் செய்து செல்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு கூட ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டு வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போதும் கூட மூலஸ்தான தங்க கோபுரத்தை சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்.. 15 நாட்களுக்கு ஒரு முறை கோடி கணக்கில் பக்தர்களின் காணிக்கையால வருமானம் பார்க்கும் கோயில் நிர்வாகம் அதே பக்தர்களின் மனம் வருந்தும் படி தங்க கோபுரத்தைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறது.

மேலும் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்த தினந்தோறும் வழங்கக் கூடிய பிரசாதத்திட்டத்தையும் முறையாக செயல்படுத்தாமல் ஏனோ தானோ என இருந்து வருவதாக கோவிலுக்கும் பக்தர்களால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு பிரசாதக் கடை என்ற நிலை மாறி 4 கடைகள்
ஒரு பிரசாதக் கடை என்ற நிலை மாறி 4 கடைகள்

கோவிலுக்குள் தற்போது  ஒரு பிரசாதக் கடை என்ற நிலை மாறி 4 கடைகள் உள்ளது. வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக மட்டுமே தெரிகிறது. வருமானத்தை உயர்த்தும் சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் அதனை நிர்வகிக்கும் கோவிலின் இணை ஆணையரான கல்யாணி பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோவில் மூல கோபுரத்தில் நல்ல தரமுள்ள தங்க தகடுகளைப் பொருத்தி .மீண்டும் பொழிவுடன் பக்தர்கள் மனம் குளிர மாரியம்மனை தரிசித்து பின் மூலஸ்தான கோபுரத்தையும் வணங்கிச் செல்ல முழுவீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டுமே அனைத்து பக்தர்களின் வேண்டுதலாக உள்ளது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.