நியோமேக்ஸ் பண மோசடி புகாரில் தலைமறைவான திமுக புள்ளி 2 வது முறையாக முன்ஜாமீன் மனு தாக்கல் !
மதுரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் நிறுவனம். முதலீட்டாளர்களிடம் பணத்தை இரட்டிப்பு செய்து தருகிறோம், அல்லது நிலத்தை தருகிறோம் என்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வசூல் செய்து, மத்திய மாநில அரசுகளுக்கு தெரியாமல் முறைகேடாக பல்வேறு போலிநிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் ஏமாற்றினார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை பொருளாதரா குற்றப்பிரிவு போலிசார் பலர் மீது வழக்கு பதிவு செய்தும், சிலரை கைது செய்து போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்து வருகிறனர்.
போலீஸ் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகமாகவே நியோமேக்ஸ் இயக்குநர்கள் மற்றும் ஏஜெண்டுகள் பல தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி ஜெயசங்கரேசுவரன் என்பவர் நியோமேக்ஸ் நிறுவனத்தில் 73 இலட்சம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் ஏஜெண்டுகள் செல்வகுமார், நாராயணசாமி, மணிவண்ணன் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்வக்குமார் மற்றும் நாராயணசாமி ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
செல்வக்குமார் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். திமுக இவர் மனைவி சுவேதா கம்பம் நகராட்சி துணை சேர்மனாக இருக்கிறார். இவர் செல்வாக்கு மிக்கவராக இருப்பதால் இந்த பகுதியில் முதலீட்டாளர்கள் புகார் கொடுக்க பயந்து கிடக்கிறார்கள்,
இந்ந நிலையில் செல்வகுமார் முன்ஜாமீன் மனு நீதிபதி ஜி. இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ரவி ஆஜராகி மனுதாரர்கள் இருவரும் நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் இயக்குநராக உள்ளனர். எஜெண்ட் என்பது தவறானது. நாராயணசாமி, 3வது முறையாகவும், செல்வக்குமார் 2 வது முறையாகவும், முன்ஜாமீன் கோரியுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம். இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்று வாதிட்டார். உடனே மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனு விசாரணையை அக்டோபர் 13க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.