சாத்தூர் அருகே அரசு மதுபான கடையில் துடி துடிக்க இளைஞர் வெட்டிக்கொலை !
சாத்தூர் அருகே அரசு மதுபான கடையில் துடி துடிக்க இளைஞர் வெட்டிக்கொலை !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பார் உடன் கூடிய அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது இங்கு ஊழியராக பணிபுரியும், இருக்கன்குடியைச் சேர்ந்த காந்தி ராஜன் (36 ) இவர் பல ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது,
இந்த நிலையில் சம்பவத்தன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் காந்தி ராஜன் மற்றும் அவருடைய நண்பர் ஆகிய இருவரும் மதுபான கடையின் கடையின் வாசல் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் நடந்து சென்ற இரு நபர்கள் காந்தி ராஜன் அருகில் சென்று மதுபான கடை எப்போது திறக்கப்படும் என பேச்சு கொடுத்தவரே நின்று கொண்டிருந்தனர்.
திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அருவாளால் காந்திராஜன் தலையில் பின்புறமாக சரமாரியாக வெட்டி தப்பி சென்றுள்ளனர்.ரத்த வெள்ளத்தில் சரிந்த காந்திராஜன் உடன் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,அங்கு சிகிச்சை பலனின்றி காந்திராஜன் உயிரிழந்தார்,
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், அருகிலுள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்ததின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி அருகே உள்ள தொட்டி வேலன்பட்டி காவல்துறை சோதனை சாவடியில் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டனர்.
மேலும் இவர்களிடம் விசாரணை செய்யப்பட்டதில், இரு நபர்களும் இருக்கன்குடி அருகே உள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுருபிரபு (27) மற்றும் மகாலிங்கம் சுந்தரமூர்த்தி (23) என்பது தெரிய வந்தது இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இருக்கன்குடி அரசு மதுபான கடையில் மது வாங்கிவிட்டு அருகில் உள்ள கடையில் சிற்றுண்டி வாங்க எங்களுடைய உறவினர், காளிமுத்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது இருக்கன்குடி பகுதியைச் சேர்ந்த மாடேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் அஜித் குமார் ஆகிய இருவரும் கடையில் சிற்றுண்டி வாங்கி கொண்டிருந்த பொழுது அருகில் பெண்கள் இருப்பது தெரிந்தும் அருவருக்கத்தக்க தகாத வார்த்தையால் பேசியுள்ளனர்.
அப்போது என்னுடைய உறவினர் காளிமுத்து ஏன்டா இப்படி பேசுறீங்க என கேட்டதற்கு மாடேஸ்வரன் தனது கையில் வைத்திருந்த மதுபான பாட்டிலால் எங்களுடைய உறவினர் தலையில் பலமாக தாக்கினான் மாடேஸ்வரன் இந்த சம்பவத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர் காவல்துறையினர், இருந்தாலும் எங்களுடைய உறவினர் தவறு ஏதும் செய்யாமல், அமைதியாக இருந்தவரை மாடேஸ்வரன் தாக்கியது மட்டுமில்லாமல் எங்களுடைய உறவினர் மீது வன்கொடுமை சட்டத்தில் வேறு காவல்துறை வழக்கு பதிவு செய்து, மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது இதை மனதில் வைத்து தான் நாங்கள் மாடேஸ்வரனை கொலை செய்யலாம் என திட்டமிட்டு இருந்தோம், ஆனால் அவன் சிறையில் இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாமல் மிகுந்த ஆத்திரத்தில் இருந்தோம்,
மாடேஸ்வரன் மனைவியின் அண்ணன் காந்தியராஜன் சிறைச்சாலைக்கு சென்று அடிக்கடி மாடேஸ்வரனை சந்தித்து வந்தது தெரியவந்தது இவன் தான் மாடேஸ்வரனுக்கு எல்லா உதவியும் செய்து தருகிறான் என தெரிந்தது இவனை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டி மூன்று நாட்களாக காந்தி ராஜனை பின் தொடர்ந்து சம்பவத்தன்று அரசு மதுபான கடை வாசலில் வைத்து வெட்டி கொன்றோம் என வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காந்திராஜன் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கன்குடியில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பல கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
– B. மாரீஸ்வரன்