நல்லொழுக்க மிக்க மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்களால் தான் உருவாக்க முடியும் – நீதிபதி ஸ்ரீமதி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நல்லொழுக்க மிக்க மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்களால் தான் உருவாக்க முடியும் மதுரை இலக்கிய மன்ற விழாவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி பேச்சு.

மதுரை, பரவை பகுதியில் உள்ள மங்கையர்க்கரசி கல்வி குழும வளாகத்தில் மதுரை இலக்கிய மன்றம், ஸ்ரீ அருணாச்சலா அறக்கட்டளை, மங்கையர்க்கரசி கல்வி குழுமம் இணைந்து நடத்திய “நன்னெறி ஆசிரியர் விருது-2023 வழங்கும் விழாவில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசி எஸ். ஸ்ரீமதி அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு தென்மாவட்டங்களைச்சேர்ந்த ஆசிரியர்கள் , கல்லூரி பேராசிரியர்களில் சிறந்து விளங்கிய 38 பேருக்கு “நன்னெறி ஆசிரியர் விருது” வழங்கி கௌரவித்தார்.

Sri Kumaran Mini HAll Trichy

விருது வழங்கி நீதிபதி ஸ்ரீமதி பேசுகையில்,

ஆசிரியர் பணியில் இன்னும் யோகா, உடற்கல்வி போன்ற கல்விக்கு ஆசிரியர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும், நல்லொழுக்க மிக்க மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்களால் தான் உருவாக்க முடியும் எனறும்” பேசினார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

இவ்விழாவில் மதுரை இலக்கிய மன்ற நிறுவனர் திரு. ச. அவனி மாடசாமி வரவேற்புரையாற்றினார். இலக்கிய மன்றத்திறன் புரவலர்கள் திருமதி.சொர்ணா வேல்சங்கர், திருமதி.சுமதி ஆச்சி ஆகியோர் குத்துவிளக்கு ஏறினார்கள்.

ஸ்ரீஅருணாச்சலகல்வி அறக்கட்டளையின் சேர்மன் எஸ்.அருணாச்சலம் தலைமை தாங்கினார். மங்கையர்க்கரசி கல்லூரி செயலாளர் முனைவர் பி.அசோக்குமார், தமிழ்த்தேச சான்றோர் அறக்கட்டளை சேர்மன் எ.கே.ராஜதுரைவேல்பாண்டியன் மற்றும் மதுரை இலக்கிய மன்ற தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர். கே.கே.கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் அரசுப்பள்ளிக்கு உதவிவரும் “கல்விவள்ளல்” த.பா.ராஜேந்தின், இந்த ஆண்டின் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோருக்கு பாராட்டுப்பட்டயம் வழங்கப்பட்டது.

மதுரை இலக்கிய மன்ற புரவலர் சூரஜ் சுந்தர சங்கர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.