சாஷ்டாங்கமாக விழுந்தேவிட்டார் – சவுக்கு சங்கர் !
நான் அவர்களை பற்றி எழுதியவற்றை டெலிட் செய்துவிட்டேன். எனவே இந்த நீதிமன்றம் தாழ்மையுடன் நான் கேட்கும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, கருணையுடன்
சாஷ்டாங்கமாக விழுந்தேவிட்டார் – சவுக்கு சங்கர் !
ஆதாரங்களோடு அடித்து பேசுவதில் அண்ணனை விஞ்ச ஆளில்லை எனும் அளவுக்கு அதிரடி கருத்துக்களுக்கு பெயர் போனவர் சவுக்கு சங்கர்.
சவுக்கு மீடியா என்ற பெயரில் தளத்தையும் நிர்வகித்து வருகிறார். இதற்கு மேலாக, இவரை பற்றிய அறிமுகத்துக்கு அவசியமில்லாத அளவுக்கு வாசகர்களுக்கு அறிமுகமானவர் என்பதால், விசயத்துக்கு வருவோம்.
“ஆதன் தமிழ்” என்ற Youtube சேனலுக்கு அளித்த பேட்டியிலும், 31.10.2023 தேதியிட்ட ட்வீட்டிலும் ஜி ஸ்கொயர் குறித்த தரவுகளை சரிபார்க்காமல் கருத்து வெளியிட்டதற்காக இந்த மாண்புமிகு நீதிமன்றத்தில் நான் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இனி ஜி-ஸ்கொயர் பற்றி பேசுவதாகவோ, எழுதுவதாகவோ இருந்தால், அந்த நிறுவனத்தாரிடம் பேசி விளக்கம் பெறாமல் எதுவும் செய்யமாட்டேன்.
நான் அவர்களை பற்றி எழுதியவற்றை டெலிட் செய்துவிட்டேன். எனவே இந்த நீதிமன்றம் தாழ்மையுடன் நான் கேட்கும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, கருணையுடன் என் தவறை மன்னிக்க வேண்டுகிறேன்”என்ற வாசகங்களோடு சவுக்கு சங்கர் சார்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரமாண பத்திரம்தான் வைரலாக பற்றி எரிகிறது சோசியல் மீடியாவில்.
“சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துகள் காரணமாக, தங்களது நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களில் 28 பேர், முன்பதிவை ரத்து செய்துவிட்டனர்.
இதனால், 15 கோடி ரூபாய் திரும்ப அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தங்களுக்கு இது போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது இல்லை.
எனவே, மான நஷ்டஈடாக ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்” என்ற கோரிக்கையுடன், ஜி.ஸ்கொயர் நிறுவனத்தின் சார்பில், அந்நிறுவனத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர் தொடுத்த அவதூறு வழக்கில், ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் குறித்து பேச சவுக்கு சங்கருக்கு தடை விதித்து நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் பிறப்பித்த உத்தரவு அமலில் உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி பொதுவெளியில் பேசியதற்காகத்தான் இந்த சரணடைவு.
கண்களை சிமிட்டி, விரல்களை சொடுக்கி ”பார்ப்போமா” என அவர் பேசும் அந்த உடல் மொழிக்காகவே லயித்துபோன சவுக்கு சங்கரின் ரசிகர்களே கூட, “அட, என்னப்பா இது? சாஷ்டாங்கமா விழுந்துட்டாரே”னு சோசியல் மீடியாவில் கலாய்க்க வைத்துவிட்டது, இந்த துயர சம்பவம்.
– கருவேல் கருணா
வீடியோ லிங்:
[…] […]