கலைத்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்து அசத்திய அரசுப்பள்ளி மாணவி !

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கலைத்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்து அசத்திய அரசுப்பள்ளி மாணவி !

மாணவி - ஜெயமித்ரா
மாணவி – ஜெயமித்ரா

பெண்கள் தற்போது பல துறைகளில் சாதித்து தடம் பதித்து வருகிறார்கள். இது பெண்களின் யுகம் என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு துறைகளில் ஆண்களை காட்டிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். தொடர்வண்டி ஓட்டுவது தொடங்கி விண்வெளியில் தடம் பதிக்கும் வரை எல்லா இடங்களிலும் பெண்களின் பங்கு இருக்கிறது. கடந்த காலங்களில் இது ஆண்களுக்கான வேலை மட்டுமே என்ற சமூகத்தை கட்டமைக்க வைத்த அனைத்தையும், பெண்களாலும் செய்ய முடியும் என்பதை நிரூபித்து, அனைத்து துறைகளில் வெற்றி பெறுகிறார்கள்.

அங்குசம் இதழ்..

அந்த வகையில் ஒரு காலத்தில் ஆண்களால் மட்டுமே நாதஸ்வரத்தை வாசிக்க முடியும் என்றிருந்த நிலைமாறி, இன்று பல பெண்கள் நாதஸ்வரம், தவில் வாசிக்க தொடங்கி உள்ளனர் .

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் இவரது மகள் ஜெயமித்ரா (16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும் போது அதை பார்த்து கொண்டு இருப்பார். நாதஸ்வரம் மீது தீராத காதல் கொண்ட அவருக்கு நாதஸ்வரம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை ஏற்பட்டது. இதனால் தனது பெற்றோரிடம் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என அவ்வபோது கூறியுள்ளார். ஆரம்பத்தில் மறுத்த பெற்றோர்கள் பின்பு கற்றுக் கொடுக்க தொடங்கினர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள பயிற்சி எடுத்து வந்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் முழு மூச்சுடன் நாதஸ்வரம் கற்றுக் கொண்டு சிறப்பாக வாசிக்க தொடங்கினார் கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வருவதால் கவனத்தை படிப்பில் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமியின் முயற்சியில் அப்பள்ளியின் மாணவி ஜெயமித்ரா சென்னை மேலப்பாக்கம் பகுதியில் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் நாதஸ்வர போட்டியில் கலந்து கொண்டு 2 ,ம் இடம் பெற்று வெற்றி பெற்றார். நாதஸ்வர போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர் ஒரு சில துறைகளில் குறைந்த பெண்களே உள்ளனர். அதில் நாதஸ்வர பிரிவும் ஒன்று . இதனை மாற்றி அமைக்கும் விதத்தில் நான் இந்த கலையில் சாதித்து இதன் மூலம் மற்ற பெண்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களும் இந்த துறையில் வெற்றிகாண உதாரணமாக திகழ்வேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் மாணவி ஜெயமித்ரா.

அங்குசம் ஊடக குடும்பத்தினர் சார்பாக நாமும் வாழ்த்துகிறோம் !

– மணிகண்டன், திருப்பத்தூர்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

1 Comment
  1. annatta says

    A truly enjoyable post to read. Your blog has quickly become one of my favorites. Thanks for the great content!

Leave A Reply

Your email address will not be published.