கொம்பன் – ஜெகன் – திருந்தி வாழ்ந்தவனை சுட்டுக்கொன்றதா போலீசு ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருந்தி வாழ்ந்தவனை சுட்டுக்கொன்றதா போலீசு?

திருந்தி வாழ்ந்தவனை போலீசார் சுட்டுக்கொன்று விட்டதாக ஜெகன் குடும்பத்தார் மட்டுமின்றி, தமிழக கள்ளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் போன்ற அமைப்புகளும் கண்டனங்களை தெரிவித்திருக்கின்றன.
. இலால்குடி பகுதியில் செயல்பட்டுவரும் மணல் குவாரி ஒன்றில் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி 18 இலட்சத்தை சுருட்டியிருக்கிறான்.

Sri Kumaran Mini HAll Trichy

டெல்டா மாவட்டத்தை தொடர்ந்து, புதுக்கோட்டையிலும் புகுந்து அங்குள்ள குவாரி அதிபர்களை மிரட்டி மாமூல் கேட்டு தகராறு செய்திருக்கிறான். சோமரசம்பேட்டையில் உள்ள ஒரு சீட்டாட்ட கிளப்பில் புகுந்து, கல்லாப்பெட்டியை தூக்கியிருக்கிறான். வாடிக்கையாளர்களைப் போல சீட்டாட்ட கிளப்புக்குள் நுழைந்து விளையாடுவது, கடைசியில் வசூலான பணம் மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு வெளியேறுவது என்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறான். சமயபுரம் பகுதியில் இளவட்ட பசங்களுக்கு சொந்த செலவில் பட்டா கத்தி தயார் செய்து கொடுத்திருக்கிறான் என நீண்ட பட்டியலையே வாசிக்கிறார்கள் போலீசு வட்டாரத்தில்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

குடும்பத்தினரின் குமுறல்
நீதிபதியின் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடை முறைக்காக ஜெகனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, அங்கே குழுமியிருந்த செய்தியாளர்களிடம், “அநியாயமாக என் மகனை கொன்னுட்டாங்களே”னு கதறி அழதபடியே பேட்டியளித்தார் ஜெகனின் தாயார்.

கொம்பன் ஜெகனின் தாயார்
கொம்பன் ஜெகனின் தாயார்

Flats in Trichy for Sale

திருந்தி வாழ்ந்து வந்த கணவனை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்றுவிட்டதாக குற்றஞ்சாட்டிய ஜெகனின் மனைவி, ”அதுக்கு அவர் திருந்தாமலே இருந்திருக்கலாம் போல” என வருத்தத்தோடு பேசினார்.

கொம்பன் ஜெகன் மனைவி ஆர்த்தி
கொம்பன் ஜெகன் மனைவி ஆர்த்தி

கலக்கத்தில் ரவுடிகள் !
தமிழகம் முழுவதும் அதிக வழக்குகளை கொண்ட அபாயகரமான ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாக, ரவுடிகளின் வீடுகளுக்குள் புகுந்து அதிரடி சோதனைகளை போலீசார் நடத்தி வந்த நிலையில்தான், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த வினோத் என்கிற சோட்டா வினோத் மற்றும் ரமேஷ்; திருவள்ளூரை சேர்ந்த முத்து சரவணன் மற்றும் சதீஷ்; ஸ்ரீபெரும்புதூர் குள்ளா என்கிற விஷ்வா ஆகியோர் அடுத்தடுத்து என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள். ஜெகன் உள்ளிட்ட இவர்கள் அனைவரும் அதிக எண்ணிக்கையில் வழக்குகளை கொண்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீர்காழி சத்யா, கும்பகோணம் பெரியவன் ஆகியோரின் பெயில் ரத்து செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

♦♦♦

 

 

இதையும் படிங்க :

2 வயது குழந்தைக்கு டயாலிசிஸ்! 16 வயதில் சிறுநீரக செயலிழப்பு!

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.