பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீல நிறத்தை தேர்ந்தெடுத்தார் ?
பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீல நிறத்தை தேர்ந்தெடுத்தார்?
பாபாசகர் அம்பேத்கர் அவர்கள் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற மூன்று கருத்தியல்களில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கருத்தியல்களுக்கு ஏற்ற நிறமாக நீலத்தை அவர் கருதியிருக்கிறார். நீல நிற வானத்தின் கீழ் எல்லா மக்களும் சமம் என்பது ஒரு குறியீடு.
அதுமட்டுமின்றி நிறங்களின் குணாதிசயங்களை பார்த்தால் நீல நிறத்திற்கு அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், எல்லையற்ற காதல் என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது. எனவே அவர் நீல நிறத்தை தெரிவு செய்தார் என்று கருதுகிறேன்.
அவர் தன்னுடைய வாழ்நாளில் பல அமைப்புகளைத் தொடங்கினார். அவற்றுள் சில :
1.பகிஷ்கரித் ஹித்காரினி சபா (1924)
2.தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நிறுவனம் (அ) சிவில் உரிமை இயக்கம் (1925)
3.சுதந்திரத் தொழிலாளர் கட்சி (1936)
4.அனைத்து இந்திய பட்டியலினத்தோர் கூட்டமைப்பு (1942)
4.சமதா சைனிக் தளம் (1944)
5.மக்கள் கல்வி கழகம் (1945)
6.அனைத்திந்திய பட்டியல் வகுப்பினர் மாணவர் கூட்டமைப்பு (1946)
7.தீண்டப்படாதோர் சமூக மையம் (1946)
8.இந்திய பௌத்த சங்கம் (1955)
இவற்றில் சமதா சைனிக் தளம், அனைத்திந்திய பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நீல நிறத்திலேயே கொடியை அவர் வடிவமைத்ததாக குறிப்புகள் இருக்கின்றன.
முக்கியமாக சமதா சைனிக்தள் அமைப்பின் கொடி நீல நிறமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் போது “இந்தக் கொடி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் இலட்சியத்தையும் நமது லட்சியத்தை எய்த நடைபெறும் போராட்டத்தையும் பிரதிபலிக்கும்” என்று சொல்கிறார். இந்தக் குறிப்பு அந்த அமைப்பினுடைய சட்டதிட்ட நூலில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் நீலம் குறித்து அம்பேத்கர் எங்கும் விரிவாக பேசியதாகத் தெரியவில்லை.
முகநூலில்…
அழகிய பெரியவன்.