ஹலோ… டைரக்டர் பிரசாந்த் நீல், எங்களையெல்லாம் பார்த்தா எப்டிய்யா தெரியுது உங்களுக்கு ! சலார் படம் எப்படி இருக்கு ! ..
அங்குசம் பார்வையில் ‘சலார்’ பார்ட் -1 – படம் எப்படி இருக்கு ! ..
தயாரிப்பு: ‘ஹொம்பாலே ஃபிலிம்ஸ்’ விஜய் கிரகந்தூர். தமிழக ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ். டைரக்டர்: பிரசாந்த் நீல். ஆர்ட்டிஸ்ட்ஸ்: பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், பிரித்விராஜ் சுகுமாறன், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி, சம்பத் ராஜ். ஒளிப்பதிவு: புவன் கவுடா, இசை: ரவி பஸ்ரூர், எடிட்டிங்: உஜ்வல் குல்கர்னி. பிஆர்ஓ: யுவராஜ்.
1127-ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை கதை நடப்பதாக கண்டமேனிக்கு கதைவிட்டு படம் பார்ப்பவர்களை மூன்று மணி நேரம் கதற வைக்கிறார்கள். பிரபாஸ் கேரக்டர் பெயர் தேவா. சலார்னு பேர் ஏன்டான்னு கேட்ருவோமேன்னு அவய்ங்களா மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு, அதுக்கு ஒரு சுல்தான் மன்னன் கதை சொல்றாய்ங்க.
இந்த ஆயிரம் வருச ஃப்ளாஷ் பேக் கதையை மைம் கோபி சொல்றாரு. அதைக் கேட்பதற்காகவே நாலைந்து சீன்களுக்கு ஸ்ருதிஹாசனை கமிட் பண்ணிருக்காய்ங்க போல. மியூசிக் டைரக்டர் ரவி பஸ்ரூர், எல்லா வாத்தியக் கருவிகள் மேலயும் ஆளுகளை ஏறி உட்காரச் சொல்லிட்டாரு போல. காது ஜவ்வு கிழிஞ்சு ரத்தம் வந்துருச்சு.
இந்த ‘கே.ஜி.எஃப்’ னு ஒரு படத்தை எடுத்து, அதுக்கு,பான் இந்தியா படம்’னு டேக் லைன் வச்சு, அத ஓடவச்ச கொடுமையின் விளைவு, இப்ப ‘சலார்-1’ ன்னு பெருங்கொடுமையில வந்து நிக்குது. அதே மாதிரி இதுலயும் கருப்பு & மஞ்சள் டோன். அதே மாதிரி செட், அதே மாதிரி ஆயிரக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்.
ஹலோ… டைரக்டர் பிரசாந்த் நீல், எங்களையெல்லாம் பார்த்தா எப்டிய்யா தெரியுது உங்களுக்கு? கன்னட சினிமா உலகத்திலிருந்து வெளியே வாப்பா. அப்பத்தான் சினிமான்னா என்னன்னு தெரியும். நாலு லாங்குவேஜ்ல இருந்து ஆர்ட்டிஸ்டுகளைப் போட்டு ஸ்கிரீன்ல காட்னா, அது பான் இந்தியா படமா? இதுல ‘சலார் பார்ட் -2’ வரப் போகுதுன்னு க்ளைமாக்ஸ்ல கார்டு போட்டு, நம்ம கன்னத்துல ‘பளார்…பளார்’ அறைந்து வெளியே அனுப்புறாய்ங்க. .
– மதுரை மாறன்