வெள்ளி கடத்தல் கும்பலை காப்பாற்றியதா, தமிழக ரயில்வே போலீசு ?

0

வெள்ளி கடத்தல் கும்பலை காப்பாற்றியதா, ரயில்வே போலீசு?

சேலத்தில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மெமோ எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த டிச-18 அன்று மாலை நடந்த நிகழ்வு இது. சரியாக சேலத்தில் மாலை 3.30-க்கு கிளம்பிய ரயில் அதற்கடுத்த நிறுத்தமான கருப்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அவ்வளவு பிஸியான நிறுத்தம் அல்ல அது. ஆனாலும், 4 பேர் இந்த ரயிலுக்காக காத்திருந்தனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

அதுவும் சுமக்க முடியாத அளவுக்கு ஆளுக்கு ரெண்டு டிராவல் பேக்குகளோடு. ஜிம் பாய்ஸ் கணக்காக உடல்வாகு கொண்ட அவர்கள் தங்களது டிராவல் பேக்குகளை அவசரம் அவசரமாக இருக்கைகளுக்கு இடையே திணித்தனர். ஆளுக்கொரு திசையாக நோட்டமிட்டபடியும், கைகளில் செல்போனை நோண்டிய படியுமாக ரயில் பயணத்தை தொடர்ந்தனர். ஆளும் உருவமும் கையில் கொண்டுவந்த லக்கேஜும் அவர்களது நடத்தையும் நமக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியது.

அந்த நபர்...
அந்த நபர்…

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

நமக்கு தீனி போடுவதற்காகவே காத்திருந்த சக பயணி ஒருவர், “இதெல்லாம் சகஜமாக நடக்கிறது தான். வெள்ளிய கடத்திட்டு போறாங்க.”னு ரயில் இரைச்சலில் கூட வெளியே கசிந்துவிடாதபடிக்கு காதும் காதுமாய் சொன்னார்.

கை பரபரத்த நிலையில், எந்த நேரத்திலும் யாரும் எந்தவிதமான தகவலையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. அறிவித்த (+91 94429 92526) உதவி எண்ணிற்கு வெள்ளி கடத்தப்படுவதாக குறுஞ்செய்தி அனுப்பினோம்.
இதற்கிடையில் நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையமும் வந்துவிட, லோக்கல் போலீசின் காதிலும் ஒருவார்த்தை சொல்லிவிட்டு கடந்தோம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

”வெள்ளிக்கடத்தல் கும்பலை மடக்கிப்பிடித்த போலீசார்” என மாவட்ட எஸ்.பி.யிடமிருந்து தகவலுக்காக காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. சகிதம் தீவிர சோதனையை நடத்தியிருக்கின்றனர். அந்த நால்வரும் அதில் சிக்கியுமிருக்கின்றனர். ஆனாலும், ஆனாலும் அவர்களிடம் 150 கிலோ வெள்ளிப் பொருட்கள் உரிய ஆவணங்களுடன் இருந்ததாகவும் சொல்லி, அடுத்த ரயிலில் வழியனுப்பி வைத்த தகவல் அப்போது தான் நமக்கு கிடைத்தது.

அவர்கள் நால்வரும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், நகை செய்யும் பட்டறையில் இருந்து வெள்ளியால் செய்யப்பட்ட குத்துவிளக்கு, கால் கொலுசு, தட்டு, டம்ளர் உள்ளிட்ட சுமார் 150 கிலோ வெள்ளி பொருட்களை ஒடிசா மாநில புவனேஸ்வரில் உள்ள நகைக்கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக கொண்டு சென்றதாக மறுநாள் காலை நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.

”இன்று ஒருநாள் மட்டுமல்ல; வாரத்திற்கு இரண்டு முறை இதுபோல டிரிப் அடிப்பார்கள். ஒவ்வொரு டிரிப்லயும் குறைந்தது 2 கோடி மதிப்புள்ள சரக்கை கொண்டு சேர்த்திருவாங்க. அதுல ஒப்புக்கு ஒரு இன்வாய்ஸ் ரெடி பண்ணி எடுத்திட்டு போவாங்க.

ஆவணங்களோட முறையா வெள்ளி பொருட்களை எடுத்திட்டு போறவங்க, ஒதுக்குப்புறமா இருக்கும் கருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து ஏன் ஏறனும்? அதுவும் முன்கூட்டியே வந்து காத்திருந்தெல்லாம் ஏற மாட்டாங்க. ரயில் ஸ்டேஷன்னுக்குள்ள நுழையறப்பதான் ஓடியாந்து அதுவும் பின்வழியாத்தான் ஏறுவாங்க.

இந்த நாலு பேர்ல ஒருத்தன் ஏற்கெனவே, இதே வெள்ளிக்கடத்தில் கேசுல 2021 இல அரெஸ்ட் ஆனவனதான். குறிப்பா, ரயில்வே போலீசுக்கு தெரியாம நடக்க வாய்ப்பில்லை.” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

– மணிகண்டன்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.