இன்று சுடிதார் அணிந்து பள்ளி சென்றாயிற்று ! மாணவர்கள், மிஸ் சூப்பரா இருக்கு என்றார்கள் ! தலைமை ஆசிரியர் என்னம்மா…..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இன்று சுடிதார் அணிந்து பள்ளி சென்றாயிற்று ! மாணவர்கள், மிஸ் சூப்பரா இருக்கு என்றார்கள் ! தலைமை ஆசிரியர் என்னம்மா…..

பள்ளியில் சுடிதார்
பள்ளியில் சுடிதார்

இன்று சுடிதார் அணிந்து பள்ளி சென்றாயிற்று. மாணவர்கள், மிஸ் சூப்பரா இருக்கு என்றார்கள். தலைமை ஆசிரியர் என்னம்மா சுடிதார்ல வந்து இருக்கீங்க என்று இயல்பான குரலில் கேட்டார். போடலாம்னு சொல்லிட்டாங்க மேம் என்றேன். இல்லையே திருப்பி அதை கேன்சல் பண்ணிட்டாங்களேம்மா என்றார். எப்ப மேம் என்றேன்.

Sri Kumaran Mini HAll Trichy

அவர் பதில் சொல்வதற்குள் நேற்று கல்வி அமைச்சர் சொல்லிட்டாரே என்றேன். நாங்கள் வேண்டுகோள் வைத்திருந்தோம் மேம் என்றேன். நாங்கன்னா? என்றார். நாங்க நாலஞ்சு பேர் மேம் என்றேன்.

ஆனா புள்ளைங்க மதிக்க மாட்டாங்கம்மா என்றார். அருகில் நின்ற இன்னொரு ஆசிரியரும் நீட்டா சாரி கட்டிக்கிட்டு வரும் போதே மதிக்க மாட்டேங்குறாங்க… நானெல்லாம் சுடிதார் போட்டா அவ்வளவு தான் என்றார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

ஓர் ஆண் ஆசிரியர், புள்ளைகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் தெரியாதேம்மா என்றார். சார்! நீங்களும் பையன்களும் ஒரே மாதிரி பேண்ட் ஷர்ட் தானே போடுறீங்க. வித்தியாசம் தெரியலையா என்றேன். ஆசிரியர்கள் மாணவர்களை விட குட்டையா ஒல்லியா இருந்தா மதிக்க மாட்டாங்களா என்றேன். என்னை சொல்றீங்களா என்றார் அவர்.

இல்ல சார்… 23, 24 வயசுல ஆசிரியரா வராங்களே அவங்களைச் சொன்னேன் என்றேன். நாம எப்படி நடந்துக்கிறோமோ, அத வச்சு தானே மரியாதை எல்லாம். உடையிலா இருக்கு என்றவாறு கையெழுத்திட்டு விட்டு தலைமையாசிரியர் அறையை விட்டு வெளியே வந்தேன்.

ஓரிரு ஆசிரியர்கள் தாங்களும் சுடிதார் போடப் போவதாகச் சொன்னார்கள். மற்றவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. ஓர் ஆண் ஆசிரியர் மட்டும் எல்லாம் ஓகே தான். ஆனால் உங்களுக்கு சேலை தான் நல்லா இருக்கு என்றார். வசதியான உடை சுடிதார் என்றாலும் குழந்தைக்குப் பாலூட்டும் பெண்களுக்கு மட்டும் சிரமம் என்றார். அதற்கும் ஜிப் மாடல் இருக்குது சார் என்றேன்.

(குறிப்பு: மாணவர்களிடம், நான் சுடிதார் போட்டால் மதிக்க மாட்டீங்களாடா? என்று கேட்டேன். இல்ல மிஸ் எப்பவும் போல தான் இருப்போம் என்றனர்)

 ஆசிரியை டார்வி – முகநூலில்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.