பெண் பொதுச்செயலாளர் வேண்டும் – நாம் தமிழர் பொதுக்குழுவில் ஒலித்த பெண் குரல் ! சீமானுக்கு வந்த நெருக்கடி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாம் தமிழர் கட்சி – பொதுக்குழுக் கூட்டம் சீமானைத் திகைக்க வைத்த மருத்துவ அணி நிர்வாகி

சீமான் கயல்விழி
சீமான் கயல்விழி

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கடந்த பொங்கல் நாளின்போது சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சவரம் செய்யப்படாத கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார். நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்முறையாகச் சீமானின் துணைவியார் கயல்விழி கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது.

பொதுக்குழுவில் பேசிய காளியம்மாள்,“அண்ணன் சீமான் யாரைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கின்றாரோ… அவரை வெற்றிபெறச் செய்ய நாம் அனைவரும் இரவு பகல் பாராது உழைக்கவேண்டும். அப்படி உழைக்கவில்லை என்றால், ஸ்டாலின் முதல் அமைச்சராகவே இருப்பார். உதயநிதி துணை முதல் அமைச்சராகிவிடுவார்” என்று பேசியபோது சீமான் பேச்சை நிறுத்தச்சொல்லிக் கை அசைத்தார். பின்னர்க் காளியம்மாள் தன் உரையைச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

நாம் தமிழர் கட்சியின் அடுத்த கட்சித்தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கும் சாட்டை துரைமுருகன் பேசும்போது,“கடந்த பொதுக்குழுவில் நம் கட்சியில் உள்ள 1000 பேர் மாதம் 1000 ரூபாய் வழங்குவது என்றும், மாதம் கிடைக்கும் 10 இலட்ச ரூபாயில் கட்சிப் பணியைச் சிறப்பாகச் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. மாதம் 1000 ரூபாய் கொடுப்போர் எண்ணிக்கை வெறும் 209 பேர்தான். இதனால் அண்ணன் சீமான் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்துவதற்கும் 10ஆயிரம் கொடு, 20 ஆயிரம் கொடு, 50 ஆயிரம் கொடு என்று பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார். நான் மாதம் கட்சிக்கு ரூ.2000 கொடுக்கிறேன். இதைச் சொல்லத்தான் பொதுக்குழுவிற்கு வந்தேன்” என்று முடித்துக்கொண்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

 டாக்டர் இரா.இளவஞ்சி
டாக்டர் இரா.இளவஞ்சி

நாம் தமிழர் கட்சியின் மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் இரா.இளவஞ்சி பேசும்போது சீமான் அவர்கள் தாய் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும்போது,“நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் போட்டியிடுவதற்குப் பெண்களுக்கு 50% தொகுதிகளை வழங்கி இந்திய அரசியல் களத்தைத் திகைக்கவைத்துள்ளார் அண்ணன் சீமான். இந்தியாவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அண்ணன் சீமான் இந்தியாவுக்கு வழிகாட்டியுள்ளார். இந்த நேரத்தில் ஒரு செய்தியை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். நம் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளிலும் 50% பெண்களுக்கு வழங்கவேண்டும் என்று இப் பொதுக்குழுவில் பதிவு செய்கிறேன். மேலும், கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு பெண் நியமிக்கப்பட வேண்டும். காரணம் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வெற்றி பெற்று அண்ணன் நம் தாய் சீமான் அவர்களைக் கோட்டையில் முதல்வராக அமரவைப்பார்கள். அவர் கோட்டையில் வில், புலி, கயல் பொறித்த தமிழ்க்கொடியை ஏற்றி வைப்பார்” என்று உரையாற்றினார்.

நாம் தமிழர் கட்சி - பொதுகுழு
நாம் தமிழர் கட்சி – பொதுகுழு

இளவஞ்சி அவர்கள் பேசியதைப் பொதுக்குழுவில் உள்ள அனைவரும் உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்கள். சீமான் மற்றவர்களிடம் கலந்தாலோசனை செய்துகொண்டிருந்தார். இறுதியாக உரையாற்ற வந்த சீமான்,“தேர்தலில் நான் நாடாளுமன்ற/சட்டமன்றத் தொகுதியில் நிறுத்துகின்ற வேட்பாளர்களுக்குத் தம்பி, தங்கைகள் வேலை செய்யவேண்டும். குறை சொல்லக்கூடாது. குறை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கலாம். கட்சியில் அவர்களுக்கு இடமில்லை. என்னை நம்பி அரசியல் பயணத்திற்கு வாருங்கள். நம்பாதவர்களுக்குப் பயணத்தில் இடமில்லை. எனக்குப் பின்னால் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை நம்பவில்லை. உங்களுக்கு முன்னால் நான் இருக்கிறேன் என்பதுதான் பெருமை. நிச்சயம் ஒருநாள் வெல்வோம். நாம் தமிழர்” என்று உரையை நிறைவு செய்தார்.

உரையில் மருத்துவ அணியின் நிர்வாகி டாக்டர் இரா.இளவஞ்சி முன்வைத்த கட்சியில் பெண்களுக்கு 50%, பெண் பொதுச்செயலாளர் குறித்துச் சீமான் தன் உரையில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதும் உரையின்போது வழக்கமான உற்சாகமும் வேகமும் குறைந்திருந்தது. கட்சியில் சீமான் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்சியில் அவ்வப்போது எதிர்ப்பு கிளம்பிக் கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

-சிறப்பு செய்தியாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.