டி ராஜேந்தர், ராமராஜன், பாக்யராஜ் போல் யார் வேண்டுனாலும் அரசியலுக்கு வரலாம் – விஜய் அரசியல் குறித்து நடிகர் வடிவேல்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வடிவேல்
வடிவேல்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. மதுரையில் பிறந்ததால், இவருக்கு வைகைப்புயல் என்ற பட்டம் கொண்டு மக்கள் அழைத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின் பல்வேறு உயரங்களை எட்டினாலும், அவரின் குடும்பத்தினர் மதுரையிலேயே வசித்து வருகின்றனர். இவரது தாய் சரோஜினிக்கு 87 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு இருந்து வந்த சூழலில், திடீரென கடந்த ஆண்டு காலமானார். இவரது மரணம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. எனக்கு எனது தாயார் தான் எல்லாமே எனவும் அவர் இறந்த துக்கம் மீள்வதற்குள் எனது சகோதரன் கடந்த ஆறு மாதத்திற்கு முன் இறந்தது என்னால் தாங்க முடியவில்லை என்னத் தெரிவித்தார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

இதனையடுத்து தனது தாயாரின் ஆன்மா சாந்தியடைவதற்காகவும்,அவர்கள் வைகுண்டம் பதவியடைவற்கும் அவர்களுக்கு வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நந்திமண்டபத்தில் மோட்சதீபம் ஏற்றினார். அப்போது பேசிய நடிகர் வடிவேலு எனக்கு எல்லாமே என் தாயார் தான் அவர் இறந்த தூக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை எனவும் எனது சகோதரர் இருந்து ஆறு மாதம் தான் ஆகிறது அதற்கு முன் என் தாயார் இறந்து விட்டார், இந்த சோகத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை என தெரிவித்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மேலும் செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு கருத்து கேட்ட பொழுது யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம், டி ராஜேந்தர் வந்தார், ராமராஜன் வந்தார், பாக்யராஜ் வந்தார் ஆகவே மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம் யாரும் வரக்கூடாது என சொல்ல முடியாது அல்லவா என அவர் தோரணையில் கேள்வி எழுப்பினார்.. மேலும் இன்னும் ஆறு மாதம் கழித்து தனது சகோதரனுக்கு மோட்ச தீபம் ஏற்ற ராமேஸ்வரம் வருவதாக கூறி சென்றார்.

பாலாஜி 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.