பாஸ்ட் புட் உணவுமுறைகளால் அதிகரிக்கும் இளவயது துர் மரணங்கள் !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

திருப்பத்தூர் சிறுதானிய உணவுத் திருவிழா
திருப்பத்தூர் சிறுதானிய உணவுத் திருவிழா

இயற்கை உழவர்கள் கூட்டமைப்பின் சார்பில், “சந்தனம்” நகரமான திருப்பத்தூரில் நடைபெற்ற `சிறுதானிய உணவுத் திருவிழா’ இன்றைய பாஸ்ட் புட் காலத்திற்கு மாற்றாக பாரம்பரிய உணவு முறையை முன்வைக்கும் விழிப்புணர்வு நிகழ்வாக நடந்தேறியது.
கடந்த பிப்ரவரி 4 அன்று திருப்பத்தூரில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவை, ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஆ. ராமர் துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் சிறப்பு பங்கேற்பாளராக பங்கேற்றார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

கோ.நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரது படத்திறப்பு விழாவைத் தொடர்ந்து திருப்பத்தூர் பசுமை சந்தையை துவக்கி வைத்தனர். இவ்விழாவின் சிறப்பம்சமாக, நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்த கண்காட்சியில், சிறுதானியங்கள், பாரம்பர்ய அரிசி வகைகள், விதைகள், மூலிகைச் செடிகள், சருமத்துக்குப் பாதிப்பில்லாத அழகு சாதனப் பொருள்கள், மரச்செக்கு எண்ணெய், பாரம்பர்ய உணவு வகைகள், இயற்கையான பூஜை பொருட்கள் சிறுதானிய சுத்திகரிப்பு மற்றும் மதிப்பூட்டல் செய்யும் இயந்திரங்கள், இயற்கை வேளாண்மைக்கான இடுபொருள்கள் , உட்பட இயற்கை சார்ந்த பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

திருப்பத்தூர் சிறுதானிய உணவுத் திருவிழா
திருப்பத்தூர் சிறுதானிய உணவுத் திருவிழா
3

வெறும் 50 ரூபாய்க்கு இவர்கள் வழங்கிய ஒன்பது வகையான சிறுதானிய உணவுகள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின. இவை மட்டுமின்றி, வெற்றிலை ரசம், அவல் கார கொழுக்கட்டை, நாயுருவி வேர் இரசம், மாங்காய் இரசம், மாயன்கீரை துவையல், புளிச்ச கீரை துவையல், வெப்பாலைபட்டை புளிக்குழம்பு , முடவாட்டுக்கால் சூப், முளைகட்டிய தானிய சாலட், தேங்காய்ப்பால் மோர், நெல்லி தயிர் பச்சிடி, பச்சைபயிறு லட்டு, புடலங்காய் பஜ்ஜி, சாமை கார பணியாரம், கற்பூரவல்லி பஜ்ஜி, காய்கறி ஊத்தாப்பம் , இராகி பூரி, பீட்ருட் பூரி, தினை லட்டு, கம்பு இட்லி, மூங்கிலரிசி பாயாசம், காடை முட்டை பணியாரம் என அரங்கில் இடம்பெற்றிருந்த திண்பண்டங்களின் பெயரை பட்டியலிட்டால் நாலு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுவிடும் போல.
இதுவரை செவிவழியாக மட்டுமே கேட்டறிந்த பாரம்பரிய அரிசி வகைகளான மாப்பிளை சம்பா, அறுபதாம் குருவை, பூங்கார் . தூயமல்லி, காட்டுயானம் , மூங்கில் , குழிவெடிச்சான், தங்கச்சம்பா , நவரா, இலுப்பை பூ சம்பா, இரத்த சாலி, பனங்காட்டு குடவாலை உள்ளிட்ட சிறுதானிய வகை அரிசிகளை நேரில் காணும் வாய்ப்பை வழங்கியது, இந்த விழா.

“விதைகளே இனி பேராயுதம்” தலைப்பில் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பின் உழுது உண் சுந்தர் அவர்களும்; திருப்பத்தூர் மாவட்ட தொல்லியல் எச்சங்கள்” தலைப்பில் முனைவர் ஆ.பிரபு, உதவிப்பேராசிரியர், தூய நெஞ்சக் கல்லூரி அவர்களும்; ”நலம் தரும் காய்கறிகள்” தலைப்பில் இயற்கை உணவு ஆலோசகர் கோவை பாலா அவர்களும்; “திருப்பத்தூர் மாவட்ட காடுகளும் வலசை பாதைகளும்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆற்றல் பிரவீன்குமார் அவர்களும்; “பாரம்பரிய உணவியலும் நவீன உணவியலும்” தலைப்பில் அரசு சித்த மருத்துவர் . வி.விக்ரம்குமார் அவர்களும்; ”இயற்கை வழி உழவர்களின் சிக்கல்களும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் திரு. கு.செந்தமிழ்செல்வன் அவர்களும்; நிறைவாக, “உணவும் ஆரோக்கியமும்” என்ற தலைப்பில், மருத்துவர் கு.சிவராமன் அவர்களும் சிறப்புரையாற்றினர்.

4
திருப்பத்தூர் சிறுதானிய உணவுத் திருவிழா
திருப்பத்தூர் சிறுதானிய உணவுத் திருவிழா

“நம் நாட்டில் இளம் வயது மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை துர் மரணம் என்று சொல்வோம். துர்மரணம் என்றால் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, இருக்கும் போது பேரப் பிள்ளைகள் மரணம் அடைவதாகும். அதனால், சத்தான உணவுகளை தற்போது உள்ள இளைஞர்கள் உட்கொள்ள வேண்டும். கடந்த 2022 ஆண்டு முடிவில் சுமார் 6 மாதங்களில் 22 ஆயிரத்து 600 பேர் இந்தியா முழுவதும் திடீர் மரணம் அடைந்தனர். காரணம் அறிய இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் 47 அதிகாரிகள் கொண்ட குழு , ஆய்வு செய்தது. அதில் 750 பேர் மரணத்தை துல்லியமாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
இறந்தவர்களில் 13 % பேர் சர்க்கரை நோயாளிகள்;, 15% பேர் 40 வயதுக்குள் மாரடைப்பால் இறந்தவர்கள் என்றும்; 17% பேர் அதிக அளவில் மது பழக்கத்திற்கும்; 10% பேர் கடும் உடற்பயிற்சி செய்தவர்கள் என்றும் கண்டறிந்தனர். இந்தியாவிலேயே அதிகப்படியான. சர்க்கரை வியாதி வந்தவர்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். இதை போக்க கம்ஞ்சோறு தினை அரிசி ,வரகரிசி உணவுகளுக்கு மாற வேண்டும்.

திருப்பத்தூர் சிறுதானிய உணவுத் திருவிழா
திருப்பத்தூர் சிறுதானிய உணவுத் திருவிழா

வயிற்றுக்கடியில் உள்ள நுண் உயிர்களையும் பாதுக்காக்க வேண்டும். 55% உடலுக்கும் 45 % சதவிதம் நுண்ணியரிக்கும் சேர்த்து சத்தான உணவை நாம் உட்கொள்ள வேண்டும். சைனீஸ் உணவுகள் மதிப்பு கூட்டப்பட்ட வெள்ளை அரிசி சாப்பாடு , வெள்ளை சர்க்கரை சாப்பிட்டால் புற்று நோய்கள் வரும். எதிர்காலத்தில், கடுமையான மழையும் கொடுமையான வெயிலும் அடுத்த 20 வருடங்களில் நிகழும். மிகப்பெரிய இயற்கை மாற்றம் வரும்.” என எச்சரித்தார் மருத்துவர் கு.சிவராமன்.

– மணிகண்டன்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.