அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சியில் செல்லப் பிராணிகளுக்கான அதிநவீன மருத்துவமனை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

FURRY GENIUS
FURRY GENIUS

திருச்சியில் செல்லப் பிராணிகளுக்கான அதிநவீன மருத்துவமனை. திருச்சி சாஸ்திரி ரோடு , தில்லை நகர் 7 வது கிராஸ் வடகிழக்கு விரிவாக்க பகுதியில் புதிதாக FURRY GENIUS என்ற பெயரில் செல்ல வளர்ப்பு பிராணிகளுக்கான அதிநவீன மருத்துவமனையை தொழிலதிபர் கே .என். அருண் நேரு திறந்து வைத்தார்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கால்நடை மருத்துவத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பிரசன்ன குமார், சிரஞ்சீவிகுமார், சிவச்சந்திரன் ஆகியோர் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இம் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, உடல் உறுப்புகள் பரிசோதனை, டிஜிட்டல் எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை அரங்கம், பல், கண் பரிசோதனை பிரிவு மற்றும் முடி பராமரிப்புக்கான Spa ஆகியவை மட்டுமல்லாமல் இரத்த பரிசோதனை, தடுப்பூசி ஆகிய வசதிகளும் உள்ளது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

FURRY GENIUS
FURRY GENIUS

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது நாய்களுக்காக சிறப்பு பயிற்சிகள் வழங்குகிறோம். இரண்டு அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளதால் ஒரே நேரத்தில் 20 நாய்கள் வரை அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு செய்ய முடியும்.வெளியூர் செல்பவர்கள் தங்களது செல்லப் பிராணிகளை (நாய் ,பூனை )ஒப்படைத்துச் செல்லும் Boarding accommodation வசதி 20 பிராணிகள் அளவுக்கு செய்துள்ளோம் .

முற்றிலும் குளிரூட்டப்பட்ட இம் மருத்துவமனையில் அனைத்து விதமான உணவுகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் விற்பனை செய்கிறோம். கேரளா ,சிவகாசி, கும்பகோணம், திருச்சி பாலக்கரை அடுத்து இது எங்களது ஐந்தாவது மருத்துவமனையாகும். இது முற்றிலும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு முழு மருத்துவமனையாகும் என்றும் தெரிவித்தனர்.

சந்திரமோகன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.