திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் !

திருச்சியில் அ.தி.மு.க, அ.ம.மு.க சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதா உருவப்படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாபன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ,மாவட்ட மாணவர் அணி செயலாளர் இப்ராம்ஷா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா ஃபாரிக், கவுன்சிலர் அம்பிகாபதி, மெல்ல மண்டி சண்முகம், எம் .ஆர். ஆர் .முஸ்தபா உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில்.. பெல் தொழிற்சாலை வாயில் எதிரில் உள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து பொதுமக்களும் காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ட்டது,
அவை தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடந்த இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, தன்சிங், வழக்கறிஞர் சரவணன், நெல்லை லட்சுமணன், கல்நாயக் சதீஷ், உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, வட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
– சந்திரமோகன்