அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு !
அதிமுக தரப்பில் தொகுதி பங்கீடு குறித்து அறிவித்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு !
அதிமுக தரப்பில் தொகுதி பங்கீடு குறித்து அறிவித்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுக போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1. வட சென்னை- ராயபுரம் ஆர்.மனோ
2. தென் சென்னை – ஜெ.ஜெயவர்த்தன்
3. காஞ்சிபுரம் – ராஜசேகர்
4. அரக்கோணம் – ஏ.என்.விஜயன்
5. கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
6. ஆரணி – கஜேந்திரன்
7. விழுப்புரம் – பாக்யராஜ்
8. சேலம் – விக்னேஷ்
9. நாமக்கல் – கவிமணி
10. ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
11. மதுரை – டாக்டர் சரவணன்
12. கரூர் – தங்கவேல்
13. சிதம்பரம் – சந்திரகாசன்
14. நாகப்பட்டினம் – சுர்ஜித் சங்கர்
15. தேனி – வீ.டி.நாராயணசாமி
16. இராமநாதபுரம் – பா.ஜெயபெருமாள்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவுக்கு 1. விருதுநகர் 2. திருச்சி 3. கள்ளக்குறிச்சி 4. கடலூர் 5. மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மேலும் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளூர் தொகுதியும், SDPI கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகத்திற்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதவன்.