அங்குசம் சேனலில் இணைய

வேட்பாளரை வெற்றி பெற செய்யாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் !

சோழவந்தான் தொகுதியில் நான் உழைத்ததால் தான்  தற்போது அமைச்சராக பதவி உயர்ந்துள்ளேன். எனவே, கட்சியினர் துரோகம் செய்யாமல் ...

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வேட்பாளரை வெற்றி பெற செய்யாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் !

துரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அறிமுக கூட்டம் பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட பத்திரபதிவு துறை அமைச்சர் முர்த்தி, ”தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும். 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற முடியாவிட்டால், மறுநாளே  நான் எனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்வேன்” என தடாலடியாக அறிவித்தார் அவர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மேலும், “உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும். கட்சிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் நான் உழைத்ததால் தான்  தற்போது அமைச்சராக பதவி உயர்ந்துள்ளேன். எனவே, கட்சியினர் துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்” என வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷாகுல், படங்கள் : ஆனந்த்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.