அப்ப ரஜினியைக் கவிழ்த்த ‘கங்[கு]வா’ ! இப்ப சூர்யாவை சூப்பர் ஸ்டார் ஆக்குமா ?

இந்த  லேட்டஸ்ட் ‘கங்குவா’வைப் பற்றி எழுதும் போது ஓல்டெஸ்ட் ‘கங்வா’[Gangva]வைப் பற்றிய ஃப்ளாஷ்பேக்கையும் சொன்னா நல்லாருக்கும்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அப்ப ரஜினியைக் கவிழ்த்த ‘கங்[கு]வா’  ! இப்ப சூர்யாவை சூப்பர் ஸ்டார் ஆக்குமா ?

 

ப்போதைய சினிமா ‘மிராக்கிள்’ என்றால் ஒரு சினிமாவின் டீசர் ரிலீசாகி அதை எத்தனை லட்சம் அல்லது கோடிப்பேர் யூடியூப்பில் பார்க்கிறார்கள் என்பது தான். முழுப்படமும் ரிலீசான பிறகு அதை எத்தனை ஆயிரம் பேர் பார்த்தார்கள் என்றெல்லாம் ‘ரிசர்ச்’ பண்ணக்கூடாது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

  இந்த வகையில் கடந்த வாரம் ரிலீசான சூர்யாவின் ‘கங்குவா’[ Kanguva] டீசர் 2 கோடிக்கு மேலான பார்வையாளர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளது. இந்த டீசரை ரிலீஸ் பண்ணுவதற்காகவே மும்பையில் பிரம்மாண்ட விழாவை நடத்தியுள்ளது அமேசான் பிரைம் ஓடிடி பிளாட்ஃபார்ம். ஸ்டுடியோ க்ரீன் பேனரின் ஓனரான கே.ஈ.ஞானவேல்ராஜாவுடன், யூவி கிரியேஷன்ஸ் வம்சி-புரமோத் கைகோர்த்து தயாரித்துள்ள இந்த ‘கங்குவா’வை சிவா டைரக்ட் பண்ணியுள்ளார். இந்தியாவின் 10 மொழிகளில் இந்த ‘கங்குவா’ மே அல்லது ஜூனில் ரிலீசாகலாம்.

இந்த  லேட்டஸ்ட் ‘கங்குவா’வைப் பற்றி எழுதும் போது ஓல்டெஸ்ட் ‘கங்வா’[Gangva]வைப் பற்றிய ஃப்ளாஷ்பேக்கையும் சொன்னா நல்லாருக்கும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

தமிழில் நிலையான ஹீரோ அந்தஸ்து, இன்னும் சொல்லப் போனால் ‘சூப்பர் ஸ்டார்’ கிரேடு கிடைத்த பிறகு, அவ்வப்போது சில இந்திப் படங்களிலும் ரஜினி  நடித்துக் கொண்டிருந்தார். அமிதாப்பச்சன், ஜாக்கி ஷெராஃப், கோவிந்தா, மிதுன் சக்கரவர்த்தி போன்ற இந்தி சினிமாவின் பிரபலங்களுடன் வெயிட்டான கேரக்டரில் நடித்து வந்தார் ரஜினி. இவரின் ஸ்டைலுக்கு அங்கும் ஓரளவு மவுசு இருந்தது.

இந்த நிலையில் தான் 1983-ல் ராஜசேகர் டைரக்‌ஷனில் தியாகராஜன் –சரிதா, கவுண்டமணி காம்பினேஷனில் ‘மலையூர் மம்பட்டியான்’ என்ற படம் ரிலீசானது. அதுவரை மிகச் சாதாரண நடிகராக இருந்த தியாகராஜனை சினிமாவில் நல்ல நிலைக்கு உயர்த்தியது இந்த ‘மலையூர் மம்பட்டியான்’. இப்போது வரை ‘மம்பட்டியான்’ நடிகர் என அழைக்கப்படுகிறார் தியாகராஜன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதன் பின் 1984—ல் ராஜசேகர் டைரக்‌ஷனில் பஞ்சு அருணாசலம் கதை எழுதி தயாரித்த ரஜினியின் ‘தம்பிக்கு எந்த ஊரு’வும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த நேரத்தில் ரஜினிக்கு இந்தியில் இருந்த மார்க்கெட்டைக் கணக்குப் போட்டு, அதே ராஜசேகர் -ரஜினி காம்பினேஷனில்  ‘மலையூர் மம்பட்டியானை’ இந்தியில் ரீமேக் பண்ண கன்னடத்தின் பிரபல தயாரிப்பாளரான துவாரகீஷ் விரும்புகிறார்.

மம்பட்டியான் என்ற கேரக்டர் தமிழ்நாட்டின் சேலம் மேச்சேரியில் வாழ்ந்த ஒரு மனிதனின் கதை. அதை சினிமாவுக்கேத்த மாதிரி சில சம்பவங்களை கற்பனை கலந்து சேர்த்து, அது வெற்றி பெற்றது. அதே தமிழ்நாட்டுக் கதையை  இந்தியில் எடுத்தால் ஜெயிக்குமா? அதுவும் தியாகராஜன் என்ற ஒரு சாதாரண நடிகர் நடித்த கதை தனக்கு செட்டாகுமா? என்ற சந்தேகம் ரஜினிக்கும் இருந்தது.

இருந்தாலும் இந்திக்கு ஏத்த மாதிரியும் இந்தியில் ரஜினிக்கு ஏத்த மாதிரியும் கதையில் பல மாற்றங்களைச் செய்தார் டைரக்டர் ராஜசேகர். ஷப்னா ஆஸ்மி, சரிஹா ( இந்தியில் அப்போது பிஸியான நடிகையாக இருந்தார் கமலின் முன்னாள் மனைவி) ஆகியோர் நடித்தனர். பப்பிலஹரி இசை. 1984 செப்டம்பரில் ரஜினியின் ‘கங்வா’ ரிலீசானது. ரஜினி சந்தேகப்பட்டது நிஜமானது. ஆம், படம் படுதோல்வியடைந்தது.

அதன் பின் தான் இந்தி சினிமாவில் நடிப்பதைத் தவிர்க்க ஆரம்பித்து, தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி இப்போது வரை சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் தான்.. நாற்பது ஆண்டுகள் கழித்து இப்போது சூர்யாவின் ‘கங்[கு]வா’ டீசர் ரிலீசாகி 2 கோடி பார்வையாளர்களால் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார் சூர்யா. சில வாரங்களுக்கு முன்பு, தனது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்திற்கு மும்பையிலேயே அலுவலகம் திறந்துவிட்டார் ஞானவேல்ராஜா.

அப்ப ரஜினியைக் கவிழ்த்த ‘கங்[கு]வா’ இப்ப சூர்யாவை சூப்பர் ஸ்டார் ஆக்குமா? என்பது படம் ரிலீஸ் ஆன பின் தெரிந்துவிடும்.

   மதுரை மாறன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.