ரம்ஜான் பண்டிகையை கருத்திற்கொண்டு இறுதித்தேர்வை மாற்றியமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை !
பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இறுதித் தேர்வு அட்டவணையில், ஏப்ரல்-12 அன்று ரம்ஜான் பண்டிகையின் காரணமாக, அதற்கு முதல் நாளான ஏப்ரல்-11 அன்று நடைபெறும் தேர்வை ஒரு நாள் முன்னதாகவும், ஏப்ரல் -05 அன்று நடைபெறும் உருது பள்ளிகளுக்கான தேர்வை ஒருநாள் தள்ளி ஏப்ரல்-06 அன்றும் நடத்துவதற்கு ஆவண செய்யுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ அகில இந்திய செயலருமான வா. அண்ணாமலை.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை வெளியிட்டதில் உருது பள்ளிகளுக்கு சிறு மாற்றம் செய்து அறிவித்திட வேண்டுகிறோம்.
5.04.2024 வெள்ளிக்கிழமை உருது பள்ளிகளுக்கு விடுமுறை 06.04.2024 சனிக்கிழமை நடத்திக் கொள்வதற்கும், 11-ஆம் தேதி ரம்ஜான் நோன்பு 12 ஆம் தேதி தேர்வு நடத்துகிற போது பெரும்பான்மையான முஸ்லிம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்வார்கள் என்று முஸ்லிம் ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். 12.04.2024 அன்று நடைபெறும் தேர்வை 10.04.2024 அன்றே இரண்டு தேர்வுகளையும் நடத்துவதற்கு உதவிடுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களின் வேண்டுகோளினை ஏற்பு செய்யுமாறு பெரிதும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். ” என்பதாக பள்ளிக்கல்வித்துறைக்கு வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்.
அங்குசம் செய்திப்பிரிவு.