என்னதான் ஆட்சி அமைத்தாலும் பாஜக ஒரு அடிபட்ட பாம்புதான் !

மோடி ஜீக்கும் வயதாகிறது. அவர் மனம் மாறாத கருங்கல்லா என்ன ? இதுதான் நமக்கு விடிந்தது. அதனால் அவர் மனம் மாறி நல்லாட்சி கொடுப்பார் என பாஸிடிவாக நினைத்துக்கொள்வோம்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

என்னதான் ஆட்சி அமைத்தாலும் பாஜக ஒரு அடிபட்ட பாம்புதான் !

தேர்தல் 2024 – ஆட்சி.

அங்குசம் இதழ்..

உணர்ச்சி வசப்படாமல் ப்ராக்டிக்கலாக தேர்தல் முடிவுகளை அணுகினால், எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லை.

பாஜக தான் ஆட்சி அமைக்கப் போகிறது. மோடிதான் பிரதமர் ஆகப்போகிறார். நிர்மலா சீத்தாராமன் தான் நிதி மந்திரி ஆகி மீண்டும் டார்ச்சர் செய்யப்போகிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

உண்மையில் 400 + என பாஜக சொன்னது ஒரு தந்திரம். 300க்கு பக்கம் வந்ததையே ஒரு தோல்வி போல எல்லோருக்கும் தோன்ற வைத்து விட்டு , எல்லோரும் எஞ்சாய் செய்துகொண்டிருக்கையில் நைசாக ஆட்சிக் கட்டிலில் அமரபோகிறது. ஒரு அல்ப திருப்தியை அனைவருக்கும் கொடுத்து இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என சிலர் மர்மமாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் 40 எம்பிக்கள் தேஜகூ வில் இருந்து பிரிக்க வேண்டும்.

சந்திரபாபு நாயுடு + நிதிஷ் குமார் சேர்த்தால் கூட 30 வரும். அப்புறம் சின்னஞ்சிறு கட்சிகளை பீராய வேண்டும்.

முதலில் நாயுடுவும் , நிதிஷும் வர மாட்டார்கள். கிங்க் மேக்கர்களாக இங்கே இருப்பது கெத்து என நினைப்பார்கள். பத்தோடு பதினொன்றாக காங்கிரஸுக்கு போக மாட்டார்கள். இதெல்லாம் தாண்டி ஜனாதிபதி தனிகட்சியாக அதிக எம் பி வைத்திருக்கும் பாஜக வைதான் ஆட்சி அமைக்க அழைப்பார்.

எதிர்காலத்தில் நிதிஷோ , நாயுடுவோ முறுக்கிக்கொண்டாலும் மற்ற கட்சிகளை இழுத்து பாஜக ஆட்சி தொடரும் என்றே நினைக்கிறேன்.

பாஜக ஜெயித்தாலும் பிரதமரை மாற்றுவார்கள் என்ற ஆருடங்களை எல்லாம் நான் நம்பவில்லை.

அதனால் பாஜக ஆட்சிதான் , மோடிதான் பிரதமர்.

ஜனநாயகம் தழைத்து விட்டது , அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்டது, வலுவான எதிர்க்கட்சி , ஆளும்கட்சிக்கு கடிவாளம், இந்திய மக்களின் எச்சரிக்கை , பொதுமக்களின் ரகசிய சிக்னல் என்றெல்லாம் பெனாத்தி ஏமாற்றிக்கொள்ளலாம்.

தேர்தல் அரசியல் ஆட்டம் என்றால் வெற்றி அல்லது தோல்வி , ரெண்டு மட்டும் தான்.

பாஜக + வெற்றி , காங்கிரஸ் + தோல்வி.

நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாகப் பதவி ஏற்கப்போகும் மோடிக்கு வாழ்த்துகள். இது பாஜகவை தாண்டி மோடியைப் பொறுத்தவரை தனிப்பட்ட சாதனை.

நான் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைத்ததற்கு முக்கியக் காரணம் , மதவாதத்தைத் தாண்டி வேறு பல முக்கியப் பிரச்சனைகள். மதவாதம் என்பது எந்த நாட்டுக்கும் தேவையில்லை எனினும் நான் ஏன் மதவாதத்தை முதன்மையான காரணமாகச் சொல்லவில்லை என்றால் , அதைச் சொன்னால் இஸ்லாமியர்களுக்கும் , கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே இனிக்கும். அனைத்து மதத்தினவருக்கும் பொதுவான பிரச்சனைகளை முன்னிறுத்த விரும்பினேன்.

இன்னொன்று , பிடிக்கிறதோ , பிடிக்கவில்லையோ , நம் நாட்டில் பெரும்பாலானோர் மதரீதியாகவே இயங்கி வருகையில் , என்ன செய்து தொலைவது ?

  • 1. வளர்ச்சி இல்லை.
  • 2. தொலை நோக்கு திட்டங்கள் இல்லை.
  • 3. ஏகத்துக்கும் வரி. கொடுங்கோல் அரசு போல மக்களிடம் இருந்து பிடிங்கி ஆட்சி நடத்துவது.
  • 4. வேலை வாய்ப்புக்கு எதையும் செய்யாதது , திட்டமிடாதது.
  • 5. பொருளாதாரத்தில் பெரும் கோட்டை விட்டது. டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு அதள பாதாளத்துக்கு வீழ்ந்துகொண்டே போவது.
  • 6. பெரும் பணக்காரர்கள் சகிக்க முடியாத அளவுக்கு இன்னும் இன்னும் பணக்காரர்களாக ஆகும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது.
  • 7. கடுமையான விலைவாசி ஏற்றம் மற்றும் பண வீக்கம்.
  • 8. சர்வாதிகாரி போல அரசிடமும் , அமைச்சர்களிடமும் ஒரு அடமண்ட் தனம். முக்கியமாக நி. சீத்தாராமனிடம்.
  • 9. அமலாக்கத்துறையை ஏவலாள் போல அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவது.
  • 10. முக்கியமான மக்கள் பிரச்சனையை எல்லாம் விட்டு விட்டு , ராமர் கோவில் , அது இது என பஜனை செய்துகொண்டு இருப்பது.

இதைப்போல அடுக்கிக்கொண்டே போகலாம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மொத்தத்தில் இந்தியா போன்ற ஒரு தேசத்தை ஆளவே தகுதி இல்லாத தற்குறிகள் போலவே நடந்துகொண்டார்கள். அதனால் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வேண்டும் என்று விரும்பினேன். காங்கிரஸிடம் சரியான செயல் திட்டங்கள் இல்லை. மற்ற கட்சிகளும் குழப்பின.

எல்லோருக்கும் அவரவர் சொந்த கட்சி மற்றும் சொந்த நலனே பிரதானம்.

ஒன்றுக்கும் வக்கில்லாத , ஆனால் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் ,அரசியல் தொடர்புள்ளவர்கள் மட்டும் மலைக்க வைக்கும் அளவுக்கு பண கோபுரத்தை உருவாக்கிக்கொண்டார்கள். இதை எல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கு இல்லை.

சரியான வழியில் உழைத்து சம்பாதித்து , தொழில் செய்து முன்னேறி செல்வத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்து போனது.இது ஒரு தேசத்துக்கு நல்லதல்ல.

நன்கு படித்து ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கி 5 வருடங்கள் உழைத்தும் , மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்கியும் நகரத்தில் ஒரு சொந்த வீடு வாங்க முடியாமல் , நல்ல லக்ஸூரி கார் இல்லாமல் , ஒரு சேமிப்பும் இல்லாமல் தான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு விலை வாசி விண்ணை முட்டிக்கொண்டு இருக்கிறது. அரசுக்கு இதைப்பற்றி எல்லாம் தெரியுமா தெரியாத என்றே தெரியவில்லை.

பொறியியல் பட்டதாரிகள் தொழிற்சாலைகளில் இருந்து குண்டூசி தயாரித்துத் தள்ளுவது போல வெளிவந்துகொண்டிருக்கிறார்கள். தரமும் சரியில்லை, அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லை. ஆனால் கட்டணம் மட்டும் 5 லட்சம் முதல் 50 லட்சங்கள் வரை.

ஜி எஸ் டி பிரச்சனை மற்றும் தவறான அணுகுமுறையால் , பல சிறு குறு நிறுவனங்கள் மூடிப்பட்டு விட்டது. அதைப்பற்றி எல்லாம் அக்கறையே இல்லை.

இந்த அரசு மக்களிடம் ஒரு வெள்ளைக்கார துரை மனப்பான்மையிலேயே நடந்து கொண்டது.

இப்போது மீண்டும் அந்த அரசே அமைந்திருக்கிறது.

ஒரே சின்ன மாற்றம் , தனி மெஜாரிட்டி இல்லாமல் நாயுடு மற்றும் நிதிஷ் ஆதரவில் ஆட்சி நடத்தியாக வேண்டும். இவர்களும் நாட்டு நலனை முன்னிறுத்தி பெரிய கடிவாளம் எல்லாம் போட மாட்டார்கள். எந்தக் கொள்கைப் பின்புலனும் இல்லாதவர்கள். வெயிட்டான மந்திரி பதவியைப் பெற்றுக்கொண்டு , வாலாட்டிக்கொண்டு நிற்பார்கள். அடுத்த 5 ஆண்டு சொகுசான வாழ்க்கைதான்.

காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக மாறி பெரும் மாற்றத்தை எல்லாம் ஏற்படுத்தி விடாது. ஒன்றிரண்டு மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் ரகளை செய்யலாம்.

கொஞ்ச நாட்களில் ராகுல் காந்தி தாய்லாந்து போய் ஓய்வெடுப்பார்.

சரி , கொஞ்சம் பாஸிடிவாக யோசிப்போம்.

என்னதான் ஆட்சி அமைத்தாலும் பாஜக ஒரு அடிபட்ட பாம்புதான். மோடி மற்றும் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு தங்களை சீரமைத்துக்கொள்கிறார்களா என்று பார்ப்போம்.

  • 1. நிர்மலா சீத்தாராமனை மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டு வரக்கூடாது. அவரும் காங்கிரஸ் ஜெயிக்க தன்னாலான அளவுக்கு எவ்வளவோ உழைத்தார். காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
  • 2. அம்பானி , அதானிக்கு உழைப்பதை விட்டு விட்டு , கொஞ்சமேனும் மக்களுக்கு , அடித்தள , மிடில் க்ளாஸ் , சிறு குறு தொழில்களுக்கு ஏதேனும் செய்கிறார்களா எனப் பார்க்க வேண்டும்.
  • 3. சர்வாதிகார மனோபாவத்தை கைவிட்டு விட்டு , மக்கள் நலனை கையில் எடுக்க வேண்டும்.
  • 4. வெளியுறவுக் கொள்கையில் நன்றாக செயல்படும் அரசு , உள்ளுறவுக் கொள்கையிலும் மேம்பட வேண்டும்.
  • 5. மக்களிடம் பணம் புடுங்குவதை நிறுத்தி விட்டு , மக்களிடம் பணம் பெருகி , அவர்கள் மனமுவந்து வரிகட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • 6. ஐ டி துறைதான் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறை. அதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

மோடி ஜீக்கும் வயதாகிறது. அவர் மனம் மாறாத கருங்கல்லா என்ன ? இதுதான் நமக்கு விடிந்தது. அதனால் அவர் மனம் மாறி நல்லாட்சி கொடுப்பார் என பாஸிடிவாக நினைத்துக்கொள்வோம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ராம் லல்லாவை , அல்லாவை , யேசுவை வேண்டிக்கொள்ளுங்கள்.

மோடி மனதைக் கூட மாற்ற முடியாத சக்தி இல்லாதவர்களா நம் கடவுள்கள் ?

வாழ்த்துக்கள் மோடி ஜீ ! கொஞ்சம் பாத்து பண்ணுங்க.

 

முகநூலில் :  Araathu R – அராத்து

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.