புதுச்சேரி – மக்களவைத் தேர்தல் – 2024 அதிமுகவை முந்திய நாம் தமிழர் !
பாஜக எப்படியும் வெற்றிபெறுவோம் என்று நம்பிக் கொண்டிருந்தது. கருத்துக்கணிப்புகளும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் புதுச்சேரியில் பாஜக வெல்லும் என்றே தெரிவித்திருந்தன.
புதுச்சேரி – மக்களவைத் தேர்தல் – 2024 அதிமுகவை முந்திய நாம் தமிழர் !
புதுச்சேரியில் இரங்கசாமி – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் புதுச்சேரி முதல் அமைச்சருமான வெ. வைத்தியலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜகவின் சார்பில் வேட்பளராக அறிவிக்கப்பட்டவர் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் என்பவர். இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. பாஜக கூட்டணி ஆளும் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெல்லமுடியுமா? என்ற கேள்வியும் பரபரப்பும் அரசியல் அரங்கில் எழுந்தது. இந்நிலையில் ஜூன் 4ஆம் நாள் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெ. வைத்தியலிங்கம் 1,36,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். பாஜக எப்படியும் வெற்றிபெறுவோம் என்று நம்பிக் கொண்டிருந்தது. கருத்துக்கணிப்புகளும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் புதுச்சேரியில் பாஜக வெல்லும் என்றே தெரிவித்திருந்தன. இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது.
வாக்குகள் விவரம்
1) வெ. வைத்தியலிங்கம் – காங்கிரஸ் – 4,26,005
2) ஏ. நமச்சிவாயம் – பாஜக – 2,89,489
3) மேனகா – நாம் தமிழர் கட்சி – 39,603
4) ஜி. தமிழ்வேந்தன் – அஇஅதிமுக – 25,165
இதில் புதுச்சேரியை பலமுறை ஆண்ட அஇஅதிமுக கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. அஇதிமுகவை முந்தி 3ஆம் இடத்தை நாம் தமிழர் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
ஆதவன்