முறையற்ற செட்டில்மென்ட்டிற்கு கட்டாயப்படுத்துகிறா, நியோமேக்ஸ் ?
முறையற்ற செட்டில்மென்ட்டிற்கு கட்டாயப்படுத்துகிறா, நியோமேக்ஸ் ? – ”தங்களுக்கு சாதகமாக செயல்படுபவர்கள் மூலமாக என் போன்றோர் மீது அவதூறுகளை பரப்பி முதலீட்டாளர்களை உள் நோக்கத்துடன் பிரித்தாள்வது சாட்சிகளை கலைப்பதாகாதா?” என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார், சிவகாசி ராமமூர்த்தி.
நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் அவரவர்கள் அவர்களுக்கு தெரிந்த வழிமுறைகளில் எப்படியாவது இழந்த பணத்தை மீட்டுவிட வேண்டுமென்று மெனக்கெடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை ஒன்று சேரவிடாமல், நியோமேக்ஸ் நிறுவனம் பிரித்தாளும் சூழ்ச்சியை கைக்கொள்வதாகவும், பாதிக்கப்பட்டவர்களையே ஒருவருக்கொருவர் எதிரியைப் போல பகையைத் தூண்டிவிடும் வகையில் சிலர் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார், சிவகாசி ராமமூர்த்தி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,

இதுவரை மோசடி நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் அதன் பினாமிகள் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் அரசு வழி காட்டு மதிப்பில் விற்றதாகவும், வாங்கியதாகவும் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு வழி காட்டி மதிப்பில் தான் பிளாட்டுகள் விற்பனைக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அவை நீதி மன்றங்களில் ஆவணங்களாக சமர்பிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் அதிகாரப் பூர்வமான கணக்கு வழக்குகள் மற்றும் வரி சம்பந்தமான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
என்னுடைய புகார் மனு மற்றும் மதுரை DRO அலுவலகத்தில் முறையாக சமர்பித்த ஆவணங்களில் செட்டில்மென்ட், பணம் மூலமாக என்றால் ஊக்கத் தொகையுடன் அல்லது நிலமாக என்றால் அரசு வழிகாட்டு மதிப்பில் என்று குறிப்பிட்டுள்ளேன். அது ஏற்கப்பட்டுள்ளது. எனக்கும் நிறுவனத்திற்கும் ஆன ஒப்பந்தத்தில் எவ்வாறு செட்டில்மென்ட் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ அவ்வாறு தான் எனக்கு செட்டில்மென்ட் செய்ய முடியுமே தவிர வேறு முறை என்றால் அது ஒப்பந்தத்திற்கு மாறானது என நீதி மன்றத்தை நாட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். ( அது எனது உரிமை அதை யாராலும் தடுக்க இயலாது. அப்பொழுது நிறுவனத்தின் அனைத்து முறைகேடுகளையும் நீதி மன்றத்திற்கு தெரிவித்து அதற்குரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டி முறையிடப்படும் )
ஏற்கெனவே அது மாதிரியான ஒப்பந்தப்படி நியோமேக்ஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் FIR க்கு முன்பு எனக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளது. அதை வெளியிட்டால் மோசடி நிறுவனம் நிதி நிறுவனம் போன்று செயல்பட்டது நிரூபணம் ஆகி விடும். ரியல் எஸ்டேட் நிறுவனமாக செயல்பட்டார்களா இல்லை நிதி நிறுவனம் போல் செயல்பட்டார்களா என்பது தெரிந்து விடும். இது பற்றி நிறுவனம் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள உறுதி மொழிக்கு மாறானதாக கருதப்பட்டு அதற்கான சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகக் கூடும்.

2023 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முறையாக போதுமான ஆவணங்களுடன் அதாவது நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தம், நிறுவனத்திடம் இருந்து நான் வாங்கிய பணம், நான் முதலீடு செய்த பணம், என் தரப்பிலிருந்து நிறுவனத்திற்கு செட்டில்மென்ட் விசயமாக எழுதிய கடிதங்கள் & வழக்கறிஞர் மூலமாக அனுப்பப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றை விவரித்தும் ஜெராக்ஸ் ஆவணங்களை இனைத்தும் புகார் கொடுத்துள்ளேன்.
FIR க்கு முன்பு இது விசயமாக எட்டு முறை சம்மன் அனுப்பி நிறுவனத்தினர் வரவழைக்கப்பட்டு விசாரனை நடத்தப்பட்டது. நிறுவனத்தின் தரப்பிலிருந்து என்னுடைய புகாரில் குறிப்பிட்ட செட்டில்மென்ட் தொகை சரியானது என எழுத்துப்பூர்வமாக காவல் துறையிடம் எழுதிக் கொடுத்துள்ளனர். நில மோசடி விசயத்திலும் தவறான கருத்துகளை பதிவிடுகின்றனர்.
இதை அறியாத இரட்டை ஊது குழல்கள் மற்றும் ஒரு குழுவின் நிர்வாகிகள் மக்களிடம் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். நிறுவனத்திற்கு சவால் விடுகிறேன். நான் கூறியது உண்மைக்கு மாறானது என்றால் என்னுடன் பொது மேடையில் உரிய ஆவணங்களுடன் விவாதிக்க தயாரா? புகார் கொடுக்காத வர்கள் நடத்த திட்டமிட்டிருக்கும் ஜுலை 14 ஆம் தேதி கூட்டத்தில் இது பற்றி விவாதிக்க நான் தயார். நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள் தயாரா?.

5A செட்டில்மென்ட் , நிலம் மூலமாக என்றால் அதற்கு ஏன் வேறு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்? நிறுவனத்தின் சொத்துக்களை அல்லவா பிரித்துக் கொடுக்க வேண்டும். வியாபாரம் மற்றும் சுய நலத்துடன் குறுக்கு வழியில் உள் நோக்கத்துடன் எதைச் செய்தாலும் அதில் விதி மீறல் இருக்கும். அதனால் முதலீட்டாளர்களுக்கு நஷ்டமும் நிறுவனம் மற்றும் அவர்களுக்கு துணை போகிறவர்களுக்கு மறைமுகமாக இலாபம் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. நிறுவனம் ஏற்கெனவே சில சொத்துக்களை உரிய துறைகளிடம் கொடுத்துள்ளன என்பதால், அதை ஏன் செட்டில்மென்ட்டிற்கு பயன்படுத்தவில்லை. 5A செட்டில்மென்ட்டில் உள்ள முரன்பாடுகளை தீர்க்க வேண்டும்.
பணமோ அல்லது நிலமோ பாகுபாடு இல்லாமல் அல்லவா செட்டில்மென்ட் செய்ய வேண்டும். சில விசயங்களை நீதி மன்றமும் DRO அலுவலகமும் ஏற்றுக் கொண்டது என்றால் அதில் விதி மீறல் இருக்காது என்று கூறி விட முடியுமா?. முன்பு நடந்தது என்ன? உயர் நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பில் விதி மீறல்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் பற்றி விமர்சிப்பவர்கள் ஏன் மேல் முறையீடு செய்யாமல் தேவையில்லாமல் நல்லது செய்த என்னை விமர்சிக்க வேண்டும்.
தீர்ப்பின் விவரங்கள் பற்றி தெரியாதவர்களிடம் தவறான கருத்துக்களை கூறி அவர்களை திசை திருப்ப முயல்கிறார்கள். அவர்கள் மனதில் வன்மத்தை விதைக்கிறார்கள். இது வன்முறையை தூண்டும் செயல். இவர்களை குற்ற நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்த இயலும்.

ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மனு செய்தவர்கள் அப்பொழுது நீதி மன்றத்தின் மாற்று பரிகாரத்தால் இறுதி வாதத்தன்று அவர்களின் கோரிக்கைகளை கை விட்டு செட்டில்மென்ட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதை நிறுவனத்தார்கள் தவறாக புரிந்து கொண்டு அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு என்று பறைசாற்றினார்கள்.
நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் வெளியில் இருந்தால் அவர்களால் மோசடியாக சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் அவர்கள் உரிய துறைகளிடம் ஒப்படைத்து பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வைப்பதற்கு உதவுவார்கள் என்ற நிபந்தனையுடன் அவர்களின் ஜாமீனை ரத்து செய்யவில்லை. ஆனால், நடப்பது என்ன அவர்களால் இயன்றளவு சொத்துக்களை விற்கிறார்கள்.
அவர்களுக்கு வேண்டிய வர்களுக்கு சொத்தை மாற்றி எழுதி வைக்கிறார்கள். பினாமிகள் பெயர்களில் நூதன முறையில் புதிய வியாபாரம் செய்து நன்றாக சம்பாதித்துக் கொண்டு புதிய வருமானம் வருவதால் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த சிலர் நிறுவனத்துடன் இனக்கமாக செயல்பட்டு ஆதாயம் காண முயல்கிறார்கள். அது இயலாதபோது அப்பாவி மக்களிடம் ஆவேசமாக பேசி அவர்களை வன்முறைக்கு தூண்டுகிறார்கள்.

அது குற்றம் என்று தெரிந்தே பலரை அதற்கு பலி கடா ஆக்க துடிக்கிறார்கள். ஆக்கப்பூர்வமாக ஆலோசித்து புகார் கொடுத்தவர்கள் அனைவருக்கும் விரைவில் பொதுவான முறையான செட்டில்மென்ட்டிற்கு ஏற்பாடு செய்து கொடுக்க முயல வேண்டுமே தவிர ஆவேசமாக பேசினால் எல்லோரையும் அவர்களுக்கு சாதகமாக செயல்பட வைத்து விடலாம் என கருதுவது தவறு.
பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் வாங்கும் பொழுது என்ன வாக்குறுதி கொடுத்தார்கள்? அதனை ஏன் நிறைவேற்ற இயலவில்லை? என இன்று வரை ஏற்றுக் கொள்ளத் தக்க விளக்கத்தை நிறுவனம் கொடுத்துள்ளதா? ஊக்கத்தொகை கொடுக்க இயலாது எனில் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளதா?.
இல்லை, அனைத்து சொத்துக்களையும் ஒப்படைத்து விட்டோம் இனி எங்களிடம் எந்த சொத்தும் இல்லையென அறிவிக்கப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதா? இருக்கும் சொத்துக்கள் புகார் கொடுத்தவர்களுக்கு செட்டில்மென்ட் செய்ய போதாது என்ற நிலை அறிவிக்கப்பட்டுள்ளதா? அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? அப்படி இல்லை என்றால் ஏன் முறையற்ற செட்டில்மென்ட் டிற்கு கட்டாயப் படுத்துகிறார்கள். அப்பாவி மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி அவர்களை திசை திருப்புகிறார்கள்?

நீதி மன்றத்தின் உத்தரவு படி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகளின் அனைத்து சொத்துக்களையும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதா?. தரமான சொத்துக்களை மறைப்பது எதற்காக? சொத்துக்களை மறைமுகமாக விதி முறைகளுக்கு மாறாக விற்றது ஏன்?. விற்ற பணத்தை செட்டில்மென்ட்டிற்கு பயண்படுத்தாதது ஏன்? குற்றம் சாட்டப்பட்ட உடன் தலைமறைவானது ஏன்? குற்றம் செய்யவில்லை என நிரூபிக்க ஏன் முயற்சி செய்ய வில்லை? இன்னும் பலர் ஏன் தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றனர்?
தங்களுக்கு சாதகமாக செயல்படுபவர்கள் மூலமாக என் போன்றோர் மீது அவதூறுகளை பரப்பி முதலீட்டாளர்களை உள் நோக்கத்துடன் பிரித்தாள்வது சாட்சிகளை கலைப்பதாகாதா? வன்முறையை மறைமுகமாக தூண்டி விட்டு தவறான விசயங்களை சுயநலத்திற்காக சாதிக்க நினைப்பது எதனால்?.
பாதிக்கப்பட்ட வர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமே தவிர தீயவர்களின் சுயநலத்திற்காக தங்களை சிரமத்திற்கு ஆளாக்கி விடக்கூடாது. நல்லது எது, கெட்டது எது என விசயம் தெரிந்த நல்லவர்களிடம் கேட்டு அறிந்து செயல்பட வேண்டும்.
மனச்சாட்சி இல்லாத ஊது குழல்கள், வாங்கிய கூலிக்கு மாரடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அப்படி அவர்கள் செயல்படுவதால் நிறுவனம் அவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.
இதனை அறிந்து கொண்ட பலர் நிறுவனத்தின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகள் எங்கு போய் எப்படி தீர்க்கப்படுமோ அந்த இறைவனுக்கே வெளிச்சம்.” என்பதாக தெரிவித்திருக்கிறார், சிவகாசி ராமமூர்த்தி.
– அங்குசம் புலனாய்வுக் குழு.
நியோ மேக்ஸ் யாரையும் ஏமாற்றவில்லை. ஓடி ஒளியவில்லை. அதிகார வர்க்கத்தின் ஊதுகுழலான ஒரு சில பக்கிகளால் இந்த பிரச்சனை உருவாக்கப்பட்டுள்ளது.
புகார் குடுத்தவர்களுக்கு செட்டிமென்ட் குடுத்து விட்டாங்களா? எதார்ககா இவ்ளோ அதிக நாட்கள் ஆகிரது?
சட்டப்படி நடவடிக்கை முழுமையாக ஏமாந்து போகாமல் கண்டிப்பாக பணம் திரும்ப கிடைக்கும்… கொஞ்சம் நாள் ஆகும் அவ்வளவு தான் சார்..