தாலியுடன் பள்ளி மாணவி – காதலனுடன் சேர்த்து வைப்பதாக பாலியல் வன்புணர்வு செய்த மெக்கானிக் போக்சோ வழக்கில் கைது !

4

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தோகைமலை பகுதியில் பிளஸ் டூ மாணவியை சக மாணவன் தாலி கட்டிய அதிர்ச்சி சம்பவத்தில் சேர்த்து வைப்பதாக நள்ளிரவில் மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த மெக்கானிக் போக்சோவில் கைது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தோகைமலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த பள்ளி மாணவியை சக வகுப்பு மாணவன் கடந்த 27 ஆம் தேதி வியாழக்கிழமை காலை பள்ளி வளாகத்திற்குள் தாலி கட்டியதாகவும், அன்று மாலை பள்ளி முடிந்ததும் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. மறுநாள் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வழக்கம் போல இருவரும் பள்ளி வந்துள்ளனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அன்று பள்ளி முடிந்து இருவரும் தோகைமலை பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி போல கொஞ்சி குலாவி இருந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மாணவி தாலி அணிந்த நிலையில் இருவரும் கணவன் மனைவி போல பள்ளி சீருடையில் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

தோகைமலை காவல் நிலையம்
தோகைமலை காவல் நிலையம்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்த தோகைமலை போலீசார், மாணவன், மாணவி இருவரையும் எச்சரித்து அவரவர் வீட்டுக்கு செல்லுமாறு பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை பகலில் வீட்டிலேயே இருந்த மாணவி, கடந்த 29 ஆம் தேதி சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் வீட்டிலிருந்து மாயமானார்.

இதனை அடுத்து 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாணவியின் பெற்றோர் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனாலும்  அன்று மாலை மாணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவி தரப்பினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.  மாணவி தரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்குள்ள பள்ளிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பள்ளி நிர்வாகம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளிக்க கேட்டுக் கொண்டனர்.
இதை அடுத்து குளித்தலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரை அடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குளித்தலை பள்ளி மாணவ - மாணவிகள்
குளித்தலை பள்ளி மாணவ – மாணவிகள்

இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டு இருசக்கர வாகனங்களில் கொல்லிமலை செல்லும் போது போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் மெக்கானிக் சங்கர் என்பவர் தலைமறைவானார். இந்நிலையில் இருவரையும் அழைத்து வந்த போலீசார்
குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தொடர் விசாரணை தனித்தனியே நடத்தினர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் விசாரணையில், மாணவி அளித்த வாக்குமூலம்  போலீசாரையே அதிர வைத்தது.

மாணவியின் வாக்குமூலத்தில் – கடந்த 29 ஆம் தேதி சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் உன்னை தாலி கட்டிய மாணவனோடு சேர்த்து வைப்பதாக வெள்ளைப் பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வரச்சொன்னார். நானும் சென்றேன். இருசக்கர வாகனத்தில் தன்னை அழைத்துச் சென்று தோகைமலை – மயிலம்பட்டி செல்லும் சாலையில் உள்ள வாழைக்கணம் அருகே உள்ள மொட்டப்பாறைக்கு அழைத்துச் சென்றார்.

விடியற்காலை 3 மணி வரை அங்கு இருந்தபோது  மெக்கானிக் சங்கர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். என மாணவி  விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தலைமறைவாக இருந்த வெள்ளப்பட்டியைச் சேர்ந்த 23 வயது மெக்கானிக் சங்கரை போலீசார் கண்காணிக்க துவங்கினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த சங்கர் மீது குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உஷா நந்தினி போக்சோ வழக்கு பதிவு செய்தார்.

குளித்தலை மகளிர் காவல் நிலையம்
குளித்தலை மகளிர் காவல் நிலையம்

ஏற்கனவே மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன் மீதும் போக்சோ வழக்கு பாய்ந்த நிலையில், தாலி கட்ட உதவியாக இருந்த மூன்று மாணவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தொடர் தலை மறைவில் இருந்து வந்த மெக்கானிக் சங்கரை தனிப்படை போலீசார் இன்று மாலை கைது செய்தனர்.

சங்கரை தோகைமலை காவல் நிலையத்திற்கு அளித்துச் சென்ற போலீசார் மொட்ட பாறைக்கு சங்கரை அழைத்துச் சென்று அங்கு விசாரணை செய்தனர். பின்னர் மீண்டும் நிலையத்திற்கு அழைத்து வந்து இந்த சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்… விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சங்கருக்கு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். தாலி கட்டியவனோடு சேர்த்து வைப்பதாக கூறி நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-நௌஷாத். 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

4 Comments
  1. ஆனந்த் says

    தேவையற்ற செயல்கள் நடந்து உள்ளது. பிரித்து அனுப்பி வைத்த காவல்துறை என்ற நிலையில் திருமணம் ஆன மாணவி நிலை வேறு விதமாக எப்படியோ ஆகிவிட்டது. மாணவன் மீது pocso சட்டம் மூலம் வழக்கு. இந்த மாணவனின் நிலை, பெற்றோர் நிலை மிகவும் வருந்த தக்கது. இவை எல்லாம் தேவை அற்றது. மாணவனுக்கு தண்டனை, மாணவிக்கு பின்னர் வேறு திருமணமா? இது போன்ற வழக்குகள் ஆண்கள் இனத்தை கருவருக்கும். இந்த கொடுமை மாணவருக்கும், நண்பர்களுக்கும் தேவை அற்றது. இதில் தேவை இல்லாமல் mechanic சம்பந்த பட்டது, மாணவியை உடல் உறவிற்கு பயன்படுத்தியது இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்தவர்களை சிக்கலில் தள்ளி வைத்தது. இந்நிலையில் மாணவி வெளியே, மாணவர்கள், mechanic வழக்கு, கைது,சிறை,court என வாழ்க்கை. இவை சீர்கேடு உள்ள சமுதாயம்.

    1. J.Thaveethuraj says

      உண்மை தான்.. சார்..

  2. ஆனந்த் says

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்தி, பாட்டி காதை அறுத்து டாஸ்மாக் வருமானம் உயர மது அருந்திய செய்தி, அரசியல் படிக்க பயந்து சீர்கெட்ட சமுதாயத்தில் துணிந்த மாணவ,மாணவி திருமணம் சரி வாழ்த்தலாம் என வந்தால் அதுவும் கேடு உடையதாக இருக்கிறது.

    1. J.Thaveethuraj says

      அனைத்து செய்திகளும் மக்கள் விழிப்புணர்வுக்காக மட்டுமே சார்..

Leave A Reply

Your email address will not be published.