தமிழக அரசுக்கு எதிராக திமுக பழநி நகராட்சி சேர்மன் தலைமையில் ஆர்பாட்டம் !
தமிழக அரசுக்கு எதிராக திமுக பழநி நகராட்சி சேர்மன் தலைமையில் ஆர்பாட்டம் ! – நகராட்சி நிர்வாகத்தில் அத்துமீறும் பழனி தேவஸ்தானம் ! திமுக சேர்மன் தலைமையில் அனைத்து கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம் !
முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பிரதிசித்தி பெற்ற பழனி திருக்கோயில், தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்து, பழனி நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பழனி நகரமன்ற திமுக தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் தி.மு.க, அ.தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 33 வார்டு உறுப்பினர்கள் தேவஸ்தானம் தலைமை அலுவலகத்தில் தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சில கவுன்சிலர்கள் கருப்பு சட்டையை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
”தலையிடாதே, தலையிடாதே! நகராட்சி உரிமைகளில் தலையிடாதே! அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம். பறிக்காதே, பறிக்காதே ! நகராட்சி பகுதிகளை பறிக்காதே! காப்பாற்று, காப்பாற்று! பழனி உள்ளூர் மக்களைக் காப்பாற்று! பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்காதே! நிறுத்திக்கொள், நிறுத்திக்கொள்! தேவஸ்தானமே நடவடிக்கையை நிறுத்திக்கொள்! பக்தர்களின் பெயரில் உள்ளூர் மக்களை பழிவாங்காதே!” என்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள்.
தேவஸ்தான நிர்வாகம் நகராட்சி உரிமைகளில் தலையிடுவதாகவும்; பழனி நகராட்சிக்கு சொந்தமான சாலைகளை தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்வதாகவும்; பழனி நகராட்சிக்கு சொந்தமான கிரிவீதி கோவில் பராமரிப்புக்காக வழங்கப்பட்டது.
அந்த கிரி வீதியை மீண்டும் நகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும்; பழனி உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வியாபாரிகளை தொந்தரவு செய்கின்றனர்; இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஐகோர் உத்தரவின் அடிப்படையில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை தேவஸ்தான அதிகாரி அகற்றினார்கள் என்பது குறிப்பிடதக்கது.