பெண்கள் வெற்றிக்கான சட்டக் கருவிகள் !
புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி- திருச்சிராப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் – பெண்கள் படிப்பு மையம்
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 04/07/2024 அன்று ‘பெண்கள் வெற்றிக்கான சட்டக் கருவிகள்’ என்னும் தலைப்பில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கறிஞர் அருட்பணி யுவான் ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குழந்தைத் திருமணம், வரதட்சணை, கருக்கலைப்பு குறித்து பிரச்சினைகளையும், அதற்கான சட்ட நுணுக்கங்களையும். பெண்கள் பிரச்சனைகளை சந்திக்கும் விதத்தினையும், அதனை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் முறையினையும் மாணவிகளுக்குப் புரியும் விதத்தில் சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி அவர்கள் தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி அவர்களின் முன்னிலையில் இந்நிகழ்வானது நடைபெற்றது.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெர்லின் கோகிலா, திட்ட அலுவலர்கள் முனைவர் டாலி ஆரோக்கிய மேரி, முனைவர் ரோஸி லிடியா, பேராசிரியர் குழந்தை பிரியா, முனைவர் மரிய ஷீலா மற்றும் பெண்கள் படிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரிசில்லா அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளும், பெண்கள் படிப்பு மையத்தின் மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.