புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் நெகிழிப்பை இல்லாத நாள் மாணவர்கள் பேரணி
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி- திருச்சிராப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம். – புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 03/07/2024 அன்று சர்வதேச அளவில் நெகிழிப்பை இல்லாத நாள் முன்னிட்டு மாணவர்கள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் நான்கு சங்கத்தின் மாணவர்கள் 400 பேர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் பேரணி புனித சிலுவைக் கல்லூரியில் இருந்து தூய வளனார் கல்லூரி வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரை சென்று பிஷப் ஹீபர் பள்ளி வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர். நெகிழிப்பை குறித்த முழக்கங்களை எழுப்பிய வண்ணம் மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்கள். கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி, துணை முதல்வர் முனைவர் ஜோஸ்பின் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சிவரஞ்சனி, உதவிசுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதவிசுற்றுச்சூழல் பொறியாளர் கிரிஜா தேவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார்கள்.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெர்லின் கோகிலா, திட்ட அலுவலர்கள் முனைவர் டாலி ஆரோக்கிய மேரி, முனைவர் ரோஸி லிடியா, பேராசிரியர் குழந்தை பிரியா, முனைவர் மரிய ஷீலா அவர்களும் இப்பேரணியில் கலந்து கொண்டனர். அனைவரும் நெகிழிப்பை குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.