“கொழு கொழு, கிளுகிளு சதைப் பிடிப்பு” – ‘பார்க்’ ஃபங்ஷனில் டைரக்டர்கள் ‘பச்சை’ பேச்சு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“கொழு கொழு, கிளுகிளு சதைப் பிடிப்பு” – ‘பார்க்’ ஃபங்ஷனில் டைரக்டர்கள் ‘பச்சை’ பேச்சு! அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூலை 15 அன்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பார்க் படம்
பார்க் படம்

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது,

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

” இயக்குநர் முருகன் பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார்.சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக, 30 ஆண்டுகளாக சினிமாவை ரசித்து வருகிறேன் அவ்வளவுதான். மற்றபடி நான் சினிமாவைப் பற்றி ஏதும் நினைத்ததில்லை.
அவர் ஒரு இயக்குநராக என்னை அணுகிய போது நான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து வந்தார்.ஒரு நாள் சுருக்கமாகக் கதை சொன்னார்.

அப்படி அவர் சொன்ன போது உடனே நான் செய்யலாம் என்றேன். படத்தின் முதல் பாதியில் சிரித்து வயிறு வலிக்கும்,இரண்டாவது பாதில் பயத்தில் நெஞ்சு வலிக்கும் என்றார்.அது எனக்குப் பிடித்தது படம் எடுக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தை எடுத்து முடிக்க அனைவரும் நன்றாக உழைத்துள்ளார்கள்” என்றார்.

இயக்குநர் ஈ.கே.முருகன் பேசும் போது,

” இந்த பார்க் படத்தின் மூலம் தயாரிப்பாளர் எனக்குக் கொடுத்தது வாய்ப்பு அல்ல வாழ்க்கை . பொதுவாக ஹாரர் படங்களில் பேய்களை சாமியார்களைக் கொண்டு தான் விரட்ட வைப்பார்கள்.நான் அதிலிருந்து விலகி ஒரு சாதாரண ஒரு நபர் மூலம், சாலையில் செல்லும் நபர் மூலம் விரட்ட வைத்துள்ளேன்.

பார்க் படம்
பார்க் படம்

அந்த உத்தி தான் தயாரிப்பாளரைக் கவர்ந்தது. முதலில் தயாரிப்பாளர் வைத்து நான் இரண்டு குறும்படங்கள் எடுத்தேன். அதை லட்சக்கணக்கான பேர் பார்த்து அவருக்கு ஒரு வருமானம் வந்தது. அந்த நம்பிக்கையில் தான் திரைப்படத்தில் இறங்கினார்.இந்தப் படம் எடுத்து இதோ உங்கள் முன் வந்து விட்டோம். படத்திற்காக அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது” என்றார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஹீரோயின் ஸ்வேதா டோரத்தி, “அண்மையில் வெளியான லாந்தர் படத்துக்குப் பிறகு விரைவிலேயே பார்க் படத்தின் மூலம் படத்தின் மூலம் உங்கள் முன் நிற்கிறேன் . மகிழ்ச்சி.படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவரும் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து ஆதரிக்க வேண்டுகிறோம்” என்றார்.

சிறு பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்பழகன் பேசும்போது,

” இப்போது படம் எடுக்க 500 கோடி , 400 கோடி, 200 கோடி என்று கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை எடுக்கிறார்கள். எல்லாமா ஓடி விடுகின்றன?அவர்கள் 10 கோடிக்குள் எடுத்தால் 50 படங்கள் எடுக்கலாம். அப்படிப் படம் எடுத்து பலருக்கும் வாய்ப்பு அளிக்கலாம். 50 நடிகர்களை உருவாக்கலாம்; 50 இயக்குநர்களை உருவாக்கலாம்.
ஏன் அதைச் செய்வதில்லை?” என்றார்.

கதாநாயகன் தமன் குமார் பேசும் போது,

” இந்தப் படத்தில் நான் நடித்தது நல்ல அனுபவம் .ஒரு நொடி படத்திற்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது. இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் எடுத்தார்கள். நான் நடித்தேன். இரண்டு பாத்திரங்களையும் என்னால் மறக்க முடியாது.படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்கள் சொந்தப்படம் போல் நினைத்து உழைத்தார்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் மரியாதை இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தப் படம் ஜெயிக்கும்” என்றார்.

பார்க் படம்
பார்க் படம்

இயக்குநர் சிங்கம் புலி

“இந்தப் படத்தின் கதாநாயகன் தமன் வெளிநாட்டில் ஏர்லைன்ஸில் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் .அதையெல்லாம் விட்டுவிட்டுச் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

தமன் நன்றாக இருக்கிறார் நன்றாக நடிக்கிறார். அவருக்கு என்ன குறைச்சல்? இவ்வளவு நாள் தனக்காக அவர் காலத்தைச் செலவிட்டு உள்ளார். இனி அதற்குப் பலன் உண்டு.சினிமா அவரைக் கைவிடாது .ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார்”. என்றார்.

விழாவில் இயக்குநர் சரவண சுப்பையா,படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அஜய் பிலிம் பேக்டரியின் அஜய், ஆடியோ வாங்கி இருக்கும் ட்ராக் மியூசிக் ஆரோக்கியராஜ்,உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வடிவேல், இசையமைப்பாளர் அமரா, ஒளிப்பதிவாளர் பாண்டியன் குப்பன், இரண்டாவது கதாநாயகி நீமாரே, இரண்டாவது கதாநாயகன் சுரேந்தர், வில்லன்னாக நடித்திருக்கும் விஜித் சரவணன்,நடிகர் பிளாக் பாண்டி, ரஞ்சனி நாச்சியார், சித்தா தர்ஷன், நடிகை ஜெயந்திமாலா, பாடலாசிரியர் கு.கார்த்திக், ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமாரும் பேரரசும் ‘கட்டிங்’ போட்டுவிட்டு வந்திருப்பார்கள் போல. ” இரண்டு ஹீரோக்களும் சதைப் பிடிப்போடு இருக்கிறார்கள். கொழு கொழுன்னு இருக்கிறார்கள். கிளுகிளுப்பா இருக்கு. எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை” என மேடையில் பச்சையாக பேசி ‘பார்க்’ படத்தை புரமோட் பண்ணினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.