இராசபாளையத்தில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி !
இராசபாளையம் தொகுதியில் இன்று (31-07-2024) காலை 7 மணியளவில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. S. தங்கப்பாண்டியன் MLA தலைமையில், இராசபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் , நகர செயலாளர் ( வடக்கு) மணிகண்ட ராஜா ஆகியோர் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி,சேத்தூர் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், ராசபாளையம் நகர் மன்ற துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேலு , ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் துரை கற்கராஜ், செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், மற்றும் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.