#neomax – அடுத்தடுத்து உயிரைப் பறித்த நியோமேக்ஸ் !

2

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் பணமாகத்தான் வேண்டும் ! டி.ஆர்.ஓ.விடம் முறையிடப் போகும் முதலீட்டாளர்கள் !!
நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட புகார்தாரர்கள் ஒன்று சேர்ந்து, ஆகஸ்டு 08 அன்று, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த விவகாரத்தை கையாண்டு வரும் மதுரை டி.ஆர்.ஓ.வை நேரில் சந்தித்து செட்டில்மெண்டை விரைந்து முடிக்குமாறு கோரிக்கை வைக்கப்போவதாக தெரிவிக்கிறார்கள்.

தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில், அந்த அமைப்பின் சட்ட ஆலோசகர் வாய்ஸ் ஆஃப் லா வழக்கறிஞர் அழகர்சாமி முன்னின்று 5ஏ செட்டில்மெண்ட் தொடர்பான பேச்சுவார்த்தைகளை, நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களுடன் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், தேனி சங்கம் உள்ளிட்டு எந்த சங்கத்திலும் சேராத தனிநபர்களாக இணைந்து டி.ஆர்.ஓ.வை சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

அங்குசம் இதழ்..

”நியோமேக்ஸ் நிறுவனம் பட்டியலிட்டு கொடுத்திருக்கும் ஒன்றுக்கும் ஆகாத நிலத்தை எங்கள் தலையில் கட்டப்பார்க்கிறார்கள். அதுவும் மார்க்கெட் மதிப்பைக் காட்டிலும் அதிகமான விலையை வைத்து தள்ளிவிடப் பார்க்கிறார்கள். பணமாக வேண்டும் என்று கேட்டால், இப்போதைக்கு பிரச்சினை தீராது;ஆயுசு முடிந்துவிடும்.

நியோமேக்ஸ் கூட்டத்தில் யூடியுப் சேனல் வழக்கறிஞர் அழகர்சாமி
நியோமேக்ஸ் கூட்டத்தில் யூடியுப் சேனல் நடத்தும் வழக்கறிஞர் அழகர்சாமி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கிடைக்கும்வரை, இலாபம் என்று அவர்கள் கொடுக்க முன்வரும் இடத்தை கைப்பற்றுவோம் என்று தேனி சங்கத்தினர் இதற்கு நியாயம் கற்பிக்கின்றனர். வழக்கறிஞர் அழகர்சாமியும், அந்த சங்கத்துக் காரர்களும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பாலாவுடன் பேசி என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதற்கு புகார் கொடுத்த நாங்களெல்லாம் கட்டுப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தேனி சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த கம்பம் இளங்கோவன், ரோஷன் கான் ஆகியோர் இப்போது அந்த சங்கத்தில் இல்லை.

வீடியோ  லிங்

அவர்கள் நடத்திய முக்கியமான இரண்டு கூட்டங்களிலுமே, அவர்களை மேடை ஏற்றினார்களேயொழிய, ஒப்புக்குக்கூட அவர்களை பேச வைக்கவில்லை. எம்.டி. பாலாவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும்போதுகூட அவர்களை இதுநாள்வரை ஒருமுறை கூட அழைத்து செல்லவில்லை. வழக்கறிஞர் அழகர்சாமியுடன் சேர்ந்துகொண்டு அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பிடிக்காமல், அவர்கள் சொல்வதை கேட்காமல் புறக்கணித்ததாலேயே, தற்போது விலகிவிட்டார்கள்.

neomax - Md
neomax – MD

இதுவரை நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக புகார் கொடுத்த எல்லோருமே, தேனி சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதாக அவர்கள் காட்டப்பார்க்கிறார்கள். அல்லது, புகார் கொடுத்தவர்கள் அனைவருமே தேனி சங்கம் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மாறுபட்ட கருத்தை முன்வைத்தால், ”சங்கத்தை விட்டு வெளியேற்றிவிடுவோம். உனக்கு செட்டில்மெண்ட் ஆகாது” என மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ராமமூர்த்தி ஒருவர்தான் இந்த விசயத்தை சரியான திசைவழியில் கொண்டு செல்கிறார். ஆனால், அவரை 5ஏ செட்டில்மெண்டுக்கு எதிரானவர் என்பது போல சித்தரிக்கிறார்கள். இவர்கள் முன்னெடுப்பதில் உள்ள சட்ட சிக்கல்களை சுட்டிக்காட்டினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறார் என்பதாக திசைதிருப்பி விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை அணிதிரட்டி ராமமூர்த்தி வீட்டின் முன்பாக போராட்டம் நடத்துவோம் என்பதாக ஆடியோ வெளியிட்டு மிரட்டுகிறார்கள்.

கம்பம் சிவக்குமார் - ஜெனித்தா குடும்பத்தினர்.
கம்பம் சிவக்குமார் – ஜெனித்தா குடும்பத்தினர்.

ர் தொடங்கி, திருப்பாச்சேத்தி ராமலிங்கம் வரையில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சிவக்குமார் பாவம் ரொம்ப சின்ன பையன். வாழுற வயசு. இரண்டு வயசு பிள்ளையை விட்டு செத்துப் போனான். கம்பம் செல்வக்குமாருக்கு ரொம்ப வேண்டியப்பட்டவன்தான்.

அவனாலேயே ஒன்னும் முடியலயே. வீட்ல இருக்க நகை மொத்தத்தையும் தொடச்சி எடுத்து அதுவும் போக, சொந்த பந்தந்துகிட்ட இருந்ததையும் வாங்கி சுளையா நாலு கோடி கொடுத்தானே ராமலிங்கம். நாலு கோடி வச்சிருந்தவனே, கடன்காரனுக்கு பதில் சொல்ல முடியாம சாவுறான். இதெல்லாம் இவங்களுக்கு பெரிசா தெரியல. அத விடுங்க, ராமலிங்கத்துக்கு முன்னாடி செத்தவனெல்லாம் அவன் குடும்ப பிரச்சினையால செத்தான்னு சொன்னீங்க.

ராமலிங்கம்
ராமலிங்கம்

ராமலிங்கம் நியோமேக்ஸ்தான் காரணம்னு கைப்பட எழுதி வச்சிட்டு செத்திருக்கானே? சாவுக்கு நீதி வேணும்னு பாலா வீட்டை முற்றுகையிடுவோம்னு சொன்னாங்களா? அப்படி சொன்னா தமிழ்நாடு முழுசா குறைஞ்சது ஒரு லட்சம் பேர் வந்து நிப்பானே? தேனி சங்கத்து காரங்க அதை செய்வாங்களா?

நாங்க புதுசா ஒரு சங்கம் சேர்க்கனும்னு இத செய்யல. எங்களோட விருப்பத்தை நேரடியா டி.ஆர்.ஓ.கிட்டேயே தெரிவிக்கனும்னு நினைக்கிறோம். இதுல உடன்படுறவங்க வாங்கனு சொல்றோம். அப்படியே வந்தாலும், அவங்க அவங்க தனித்தனியா டி.ஆர்.ஓ. பார்த்து உங்க விருப்பத்தை சொல்லிட்டு வாங்கனுதான் சொல்றோம்.

செட்டில்மெண்ட் பணமா வேணும். அதுவும் மெச்சூரிட்டி அமொண்ட் வேணும். இதுதான் எங்களோட கோரிக்கை. இதை நாங்கள் தனிப்பட்ட முறையில் டி.ஆர்.ஓ. கிட்ட தெரிவிக்கப் போறோம். ” என்கிறார்கள் இப்போதைய சூழலுக்கு பெயர் வெளியிட விரும்பாத நியோமேக்ஸால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சிலர்.

அங்குசம் புலனாய்வுக்குழு.

வீடியோ லிங்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

2 Comments
  1. Anand says

    இப்பவும் பேராசை தான் உங்களுக்கு. ஏற்கனவே நீங்க கஸ்டத்துல இருக்கீங்க. உங்களை கஸ்டபடுத்தாம சொல்றேன். பணமா கேக்குறீங்க சரி. அதையுமே அவனுங்க குடுக்குறானுங்களா இல்லையா nu தெரியாது. இதுல maturity amount தான் வேணும்னு கேட்கிறீங்க. எப்புடி கிடைக்கும்?

  2. T.Pandiaraj Pandiaraj says

    What Mr. Ramamurthy clarification is correct.
    In addition with ,through,court proceedings,transparent discussion with Neomax authorities will be a viable solution.
    Time wasted conflict among the so-called SANGAMs leads to detrimental to the Inestors and the Neomax.
    It seems “pulicha yeappam “of a few totally affects the”pasi yeappam” thudan parithapi vipparkalai.

Leave A Reply

Your email address will not be published.