“அந்தகனில் மிரட்டும் பூனை! பிரஷாந்த் பண்ணிய வேலை! – வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் ஸ்பெஷல் நியூஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“அந்தகனில் மிரட்டும் பூனை! பிரஷாந்த் பண்ணிய வேலை! – வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் ஸ்பெஷல் நியூஸ்! டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் மிகவும் மாஸாக நாளை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அந்தகன்’. இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் ப்ரீத்தி தியாகராஜன் வழங்கும் இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், கார்த்திக், யோகி பாபு, பூவையார், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்நிலையில் ‘அந்தகன்’ வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகரிடம் இப்பட அனுபவம் குறித்து கேட்ட போது, ’’இந்தியில் ‘அந்தாதுன்’ பார்க்காதவர்களுக்கு சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட திரைக்கதை த்ரில் அனுபவம் கொடுக்கும். பார்த்தவர்களுக்கு தமிழுக்காக செய்யப்பட்ட மாற்றங்கள் புதிய அனுபவம் கொடுக்கும்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

அந்தகன் பட குழுவினர்
அந்தகன் பட குழுவினர்

நாணயமிக்க தயாரிப்பாளரும், நினைத்தது நினைத்தபடி வரவேண்டும் என்பதில் பிடிவாதம் கொண்ட இயக்குனருமான திரு. தியாகராஜனுடன் முதல் முறையாகவும், பிரபல நட்சத்திரம் என்கிற பந்தா ஒரு சதவிகிதம் கூட இல்லாத இனிய நண்பர் பிரஷாந்துடன் மூன்றாவது முறையாகவும் இணைந்து பணியாற்றியுள்ளேன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இயக்குநர் தியாகராஜன் பற்றி சொல்வதானால் படு எனர்ஜிடிக் பர்சனாலிட்டி. இப்படத்துக்கு முன்பே சில முறை சந்தித்து பேசி இருக்கிறேன். அப்படி பேசும் போதெல்லாம் வார்த்தைகளை கவனமாக கோர்த்து அளவாக பேசும் அவரின் பாணி வியக்க வைக்கும். குறிப்பாக பேச வேண்டியதைத் தவிர எதையும் யோசிக்க கூட விட மாட்டார்..!

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பார்க்க கொஞ்சம் மெஜஸ்ட்டிக்காக தோற்றமளிக்கும் அவரின்மனசு இலவம் பஞ்சை விட இலகுவானது. அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருக்கிறார் . அவர் இந்த படத்தை தேர்ந்த மிலிட்டரி மேன் போல் செயல்பட்டு அருமையாக உருவாக்கியிருக்கிறார். இதைவிட ரொம்பவே முக்கியமான சங்கதி என்னன்னா… வசனம் எழுத என்னை கமிட் பண்ணியதுமே முழு சம்பளத்தையும் கொடுத்துட்டார் .

வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர்
வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர்

நாயகன் பிரஷாந்தும் சூப்பர் ஃப்ரெண்ட்லியானவர், ஒரு போதும் தன் அந்தஸ்தைக் காட்டவோ, பின்னணியை வெளிப்படுத்தவோ விரும்பாதாவர் என்பதே அவரின் பலம். இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக பூனை ஒன்று வருகிறது.

அப்பூனை ரோலுடன் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காக ஒரு குட்டி பூனையை வீட்டிலேயே வளர்த்து அதனுடன் நடித்துள்ள ஒவ்வொரு காட்சியும் க்ளாப்ஸ் அள்ளும் என்பது நிச்சயம்.

இந்தப் படம் வெற்றிபெற்றால் இயக்குனர் பல புதிய படங்களைத் தயாரிப்பார். நல்ல நடிப்புத்திறன் கொண்ட பிரஷாந்த் மீண்டும் வெற்றி வலம் வருவார் என்பது நிச்சயம் ” என்றார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.