திருச்சி அரசு மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கம் !
கி ஆ பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவத் துறையின் சார்பில், மருத்துவ ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கம் ஆகஸ்ட் 10, 2024 நடைபெற்றது.
தென்னிந்தியா முழுவதிலும் உள்ள 29 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 80 மருத்துவர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டனர். கி ஆ பெ வி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர், டாக்டர். அர்ஷியா பேகம் , மருத்துவ ஆராய்ச்சியில் செயர்க்கை நுண்ணறிவு கருவிகளின் நெறிமுறை பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் உதய அருணா , துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். அருண்ராஜ் , சமூக மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் பர்வின் கனி ஆகியோர் கலந்து கொண்டு பயிலங்ரங்கை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியை இணைப் பேராசிரியர்கள் டாக்டர் பார்த்தசாரதி, டாக்டர் ஞானசெந்தில் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். மற்றும் சிறப்புப் பேச்சாளர்கள், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஜோசபின் பிரியா, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் அஷ்ரப் அலி ஆகியோர் கலந்து கொண்டு, மருத்துவ ஆராய்ச்சியில் எதிர்கால அணுகுமுறையாகப் பயன்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு கருவிகள் குறித்து விளக்கம் அளித்தனர் .
– மோகன் அலெக்ஸ்