பாரதிதாசன் பல்கலைகழக பெரியார் விருது ! பெரியார் தொண்டர்கள் விண்ணப்பிக்க- கடைசி தேதி – 16.08.2024

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாரதிதாசன் பல்கலையில் மீண்டும் பெரியார் பிறந்தநாள் விழா ! மகிழ்ச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பற்றாளர்கள் !! – திருச்சியில் பெரியார் பற்றாளர்கள் ஒன்றுகூடி, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

திருச்சி பாரதிதாசன் பல்கலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டுக் கிடந்த தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா இவ்வாண்டு நடைபெறும் என்பதாக பல்கலை சார்பில் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்வை ஒருங்கிணைத்திருக்கிறார்கள் பெரியார் பற்றாளர்கள்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

மகிழ்ச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பற்றாளர்கள் !!
மகிழ்ச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பற்றாளர்கள் !!

கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில், பெரியாரின் கருத்துக்களை விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், பாரதிதாசன் பல்கலை கழகத்தில் பெரியார் உயராய்வு மையம் தோற்றுவிக்கப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஒவ்வோர் ஆண்டும் செப்-17ஆம் நாளான தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் பெரியார் கொள்கைப்படி வாழ்ந்து அகவை முதிர்ந்த பெரியார் தொண்டருக்கு ரூ.1 இலட்சம் ; பெரியார் கருத்துகளை மக்களிடம் பரப்புரை செய்து வருவோருக்கு ரூ. 50ஆயிரம் ; பெரியார் குறித்து எழுதப்பட்ட சிறந்த நூல் ஒன்றுக்கு ரூ.50ஆயிரம் வழங்கி சிறப்பிக்க வேண்டுமென்ற கடப்பாடு கொண்டதாக பெரியார் உயராய்வு மையம் உருவாக்கப்பட்டது.

என்ன நோக்கத்திற்காக பெரியார் உயராய்வு மையம் தோற்றுவிக்கப்பட்டதோ, அந்த நோக்கமே பாழ்பட்டு போகும் வகையில் கடந்த மூன்றாண்டு காலமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படாமல் இருந்தது. அரசு வகுத்தளித்திருந்த வழிமுறைகளின்படி பெரியார் பற்றாளர்களுக்கான அங்கீகாரமும் வழங்கப்படாமல் இருந்தது.

பெரியார் விழா அறிவிப்பு
பெரியார் விழா அறிவிப்பு

இந்நிலையில்தான், திருச்சியை சேர்ந்த பெரியார் பற்றாளர்களின் சார்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு மேனாள் தலைவர் பேராசிரியர் நெடுஞ்செழியன், மிசா சாக்ரடீஸ் ஆகியோர் முன்னின்று பாரதிதாசன் பல்கலையின் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மூன்றாண்டுகளாக முடக்கப்பட்ட நிலையில், கடைசி ஓராண்டுக்கான 2023-24 ஆம் ஆண்டுக்கான விழாவிற்கான அறிவிப்பு மட்டுமே பல்கலையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும், பல்கலை துணைவேந்தரையும், பதிவாளரையும் நேரில் சந்தித்து, தடைபட்ட மூன்றாண்டுகளுக்குமான விழாவாக நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உறுதியாக முன்வைத்தனர். இது குறித்த செய்தி அங்குசம் இணையத்திலும் வெளியாகி பலரின் கவனத்திற்கும் சென்றடைந்தது.

இதன் எதிரொலியாக, பாரதிதாசன் பல்கலையின் சார்பில் மூன்று ஆண்டுகளுக்குமான விழாவாக நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பெரியார் சிலை முன்பு கோஷம் எழுப்பிய பெரியார் பற்றாளர்கள்
பெரியார் சிலை முன்பு கோஷம் எழுப்பிய பெரியார் பற்றாளர்கள்

திருச்சியை சேர்ந்த பெரியார் பற்றாளர்களின் உறுதியான போராட்டத்தால் கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாகவே, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

மதிமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் பொன்மலை ‘மிசா’ தி. சாக்ரடீஸ் தலைமையில் அணிதிரண்ட பெரியார் பற்றாளர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்நிகழ்வில், பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு மேனாள் தலைவர், முனைவர் தி.நெடுஞ்செழியன், பெரியார் பற்றாளர்கள் வீ.பொன்னம்பலம், ஷகிலாபானு, நாராயணசாமி, ஆறுமுகம், டார்வின்தாசன், இராமச்சந்திரன், சர்மிளா, வர்ஷினி, மணிகண்டன், திருச்சி ரமணா, ஜோசப், முபாரக் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

– ஆதவன்

பெரியார் பிறந்தநாள் விருதுக்கு நீங்களும் விண்ணபிக்கலாம்! 

பாரதிதாசன் பல்கலைக்கழக இணைய தளத்தில் பெரியார் பிறந்தநாள் – விருதுகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை
பெரியார் உயராய்வு மையத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் நாள் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடுவதும், விருதுகள் வழங்குவதும் பல்கலைக்கழகத்தில் நடைமுறைபடுத்தப்பட்டு கீழ்கண்ட விருதுகள் பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 17.09.2024ஆம் தேதியன்று விழா கொண்டாடப்படும். இது குறித்து ஜூலை 05, ஜூலை 14 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் தரப்பட்ட தகவல்கள் தொடர்ந்து கீழ்காணும் விவரங்கள் தரலாகிறது.

விருதுகள் வழங்கும் ஆண்டு : 2021-2022, 2022-2023, 2023-2024
விருதுகளின் விவரம் :

1. பெரியார் சிறப்பு விருது பொற்கிழி : ரூ.1,00,000/-
(மூத்த பெரியாரியல் அறிஞர் ஒருவருக்கு)
2. பெரியார் விருது பொற்கிழி : ரூ.50,000/-
(பெரியாரியல் அடிப்படையில் சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு)
3. பெரியார் பரிசு பொற்கிழி : ரூ.50,000/-
(பெரியாரியல் தொடர்பாக குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த ஒரு நூலின் ஆசிரியருக்கு)
மேற்கூறிய விருதுகளுக்கான விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 16.08.2024

அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் அ.கோவிந்தராஜன்
இயக்குநர்
பெரியார் உயராய்வு மையம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி – 620 024.
(ஒ-ம்)
பதிவாளர்(பொ)
பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் உண்மை நகல்

குறிப்பு – விருதுக்கு விண்ணப்பம் செய்வதற்கு உதவி தேவையெனில் 9443214142 எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.