தறிகெட்டு ஓடும் தர்மபுரி அதிமுக கோஷ்டி மோதல் ! ஆலோசனைகள் கூட்டத்தில் நடந்தது என்ன? முழு ரிப்போர்ட்
தறிகெட்டு ஓடும் தர்மபுரி அதிமுக கோஷ்டி மோதல் ! ஆலோசனைகள் கூட்டத்தில் நடந்தது என்ன? முழு ரிப்போர்ட் தர்மபுரியில் நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கிடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள பொதுச்செயலாளர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன, அம்மாவுக்குப் பிறகு எடப்பாடியால்தான் கட்சியை வழிநடத்த முடியும்” என்று வானகரம் பொதுக்குழுவில், ஒற்றைத் தலைமையாக அவர் உருவெடுத்தபோது, அவருக்காக முழங்கிய தலைகளில் பலரும், தற்போது முடிவுகளை நாம் பரிசீலிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
பிரிந்து சென்றவர்களெல்லாம் இப்போது மீண்டும் இணைத்தால்தான் கட்சிக்கு நல்லது” என ஜூலை 8-ம் தேதி, எடப்பாடியின் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், பழனிச்சாமியை ரவுண்டு கட்டியிருக்கிறார்கள் கட்சியின் ஆறு சீனியர் தலைகள்.
அப்படி எடப்பாடியை ரவுண்டு கட்டியவர்களில் கேபி அன்பழகனும் ஒருவர் தற்போது கேபி அன்பழகனையே உள்ளூர் அதிமுக நீர்வாகிகள் தொடர்ந்து ரவுண்ட் கட்டி அடிச்சசது தான் தர்மபுரியில் ஹாட் டாபிக்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைந்து போட்டியிட்ட அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது, குறிப்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதிலிருந்து அ.தி.மு.க தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஒவ்வொரு தொகுதியிலும் ஆலோசனை நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனைப்படி தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி குண்டலப்பட்டி அரங்கநாதன் – ரஞ்சிதம்மாள் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 8 ந்தேதி மாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தொமு.நாகராஜன் தலைமை வகித்தார்.
இதில் தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கேபி.அன்பழகன் தலைப்பில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது கூடத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் , வரும் உள்ளாட்சி தேர்தலில், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுரையும் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தேர்தலில் அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் கருத்து தெரிவித்த பலரும் கேபி அன்பழகனை டார்கெட் செய்துள்ளனர்.
அங்கு என்ன நடந்தது என கூட்டத்தில் கலந்துகொண்ட பெயர் கூற விரும்பாத அதிமுக மூத்த நிர்வாகி கூறுகையில்
கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தேர்தல் தோல்வி குறித்து தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். அப்போது, தர்மபுரி மாவட்ட முன்னாள் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் பேசியபோது , கேபி.அன்பழகன், 1996-ம் ஆண்டு தான் அதிமுகவில் இணைந்தார் எங்கள் குடும்பம் பரம்பரை பாரம்பரையாக அதிமுகவில் இருக்கிறது. ஆனால் 96-ல் வந்த கேபி.அன்பழகன் எல்லா பொறுப்புகளையும் அவரே வைத்துக் கொண்டார்.
இது எத்தனை பேருக்கு தெரியும் என்றதும், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது அப்போது, குறுக்கிட்ட கேபி.அன்பழகன், ‘நான் எப்போது கட்சிக்கு வந்தேன் என்று கட்சியில் இருக்கும் மூத்தவர்களை கேட்டு தெரிந்து கொள். இது போன்று பேசக்கூடாது’ எனக் கூறி, சங்கரை உடனடியாக மேடையை விட்டு கீழே இறங்கும்படி ஒருமையில் அதட்டினார்.
டிஆர் அன்பழகன் vs கேபி அன்பழகன்
அதனால் சங்கரின் உறவினரும் மாநில விவசாய பிரிவு அமைப்புச் செயலாளருமான டிஆர்.அன்பழகன், குறுக்கிட்டு கருத்து சொல்ல அவருக்கு உரிமை உள்ளது என்று, சங்கருக்கு ஆதரவாக பேசியதால் டிஆர்.அன்பழகனுக்கும், கேபி.அன்பழகனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, இருவரும் ஒருமையில் திட்டிக்கொண்டனர்.
மேலும் அங்கிருந்த இருதரப்பு ஆதரவாளர்கள், இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மேடையில் வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சங்கர் அவருடைய கருத்தை கூறியதற்கு, மாவட்ட செயலாளர் பதில் கூறினார்.
அதற்குள் நீங்கள் ஏன் இருக்கையை விட்டு ஏழுந்து வருகிறீர்கள். நீங்கள் வருவதால்தான் சண்டை ஏற்பட்டது போல் உள்ளது. நீங்கள் இருக்கையில் அமருங்கள் என இருதரப்பையும் சமரசப்படுத்தினார்.அருகில் இருந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல், கடந்த ஆண்டை போலவே கூட்டம் பாதிலேயே முடிந்தது வருத்தமாக உள்ளது என்றவரிடம் என்ன நடந்தது விரிவாக கூற முடியமா ? என்று கேட்டோம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மாவட்ட கட்சி அலுவலகத்தில், கேபி அன்பழகனுக்கும், டிஆர் அன்பழகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறியவர்.
முல்லை வேந்தன் vs சிங்காரம்
வ.முல்லைவேந்தன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர் வழக்கமாக அதிமுக கூட்டங்களில் 3-வது வரிசையில் அமர்வது வழக்கம். ஆனால் அன்றையதினம் கே.பி.அன்பழகன் முல்லை வேந்தனை தன் அருகே உட்கார வைத்துக்கொண்டபோது அங்கிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் ஆவேசமடைந்து கட்சிக்கு உழைத்தவர்களை புறக்கணித்துவிட்டு நேற்று கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவமா? என கேட்டார், அதற்கு கே.பி.அன்பழகன் எல்லாரும் கட்சிக்காக உழைத்துவர்கள் தான்.
கட்சியில் யார் செயல்படுகிறார்களோ அவர்கள் தான் கட்சி என கூறினார். இதனால் கே.பி.அன்பழகனுக்கும், மொரப்பூர் முன்னாள் எம்எல்ஏ சிங்காரத்திற்கும் அந்த ஆலோசனை கூட்டத்தில் கடும் வாக்குவதம் ஏற்பட்டது, அப்போது அங்கிருந்த இதே டி.ஆர்.அன்பழகன் சிங்காரத்திற்கு ஆதரவாக கே.பி.அன்பழகனை பார்த்து, ஆமா நீ கட்சிக்கு உழைச்சவனுக்கு எங்க மதிப்பு கொடுக்கிற , பொதுக்குழுவிற்கு என்னை ஏன் அழைத்துச் செல்லவில்லை? 2021 தேர்தலில் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ. சீட் ஏன் வாங்கித்தரவில்லை? என்று அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டு ஒருமையில் சாடினார்.
பதிலுக்கு கே.பி.அன்பழகன் நான் சீட் ஒதுக்கும் கமிட்டிலியே இல்லை. நான் எப்படி உனக்கு சீட் வாங்கி தர முடியும் சீட் ஒதுக்கும் கமிட்டியில உனக்கு வேண்டப்பட்ட கே.பி.முனுசாமி இருக்காரு, நீ ஏன் சீட்டு வாங்கிகொடுக்கவில்லை என அவரிடம் போய் கேளு என ஒருமையில் பேச வார்த்தைகள் முற்றியது.
இதனால் கே.பி.அன்பழகனை பார்த்து ”நீ ஒருத்தன் மட்டும் கட்சிக்கு பாடுபட்டாயா? எல்லோரும் தான் உழைத்தோம் ஆனால் எல்லாவற்றையும் நீயே எடுத்து செல்கிறாய். அம்மா இறந்த பிறகு நீ 5000 கோடி கல்லா கட்டிட்ட , நீ கட்சிக்காக என்னாடா உழைத்த நீயேல்லாம் ஒரு ஆளு” என பேசினார் டி.ஆர்.அன்பழகன், அப்போது பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து அநாகரீகமாக பேசாதே மரியாதையாக பேசு என சத்தம் போட்டார்.
இதனால் கடுப்பான டி.ஆர்.அன்பழகன் கோவிந்தசாமி எம்எல்ஏவை பார்த்து, டேய் நீ எல்லாம் பேசக்கூடாது மாவட்ட செயலாளர் பதில் சொல்லட்டும் என கூறியதையடுத்து. மீண்டும் கே.பி.அன்பழகனை பார்த்து உனக்கு ரூ 200 கோடி சம்பாதிக்க வாய்ப்பு கொடுத்தவன் நான், ஆனால் நீ பென்னாகரம் அதிமுகவினருக்கு என்னத்த செய்தாய்? என பதிலுக்கு எகிற ஒரு கட்டத்தில் வாய் வார்த்தை முற்றிய நிலையில் கே.பி.அன்பழகனும், டி.ஆர்.அன்பழகனும் ஒருவருக்கு ஒருவர் ஒருமையில் ஏகத்துக்கும் பேசி சட்டையை பிடித்துக்கொண்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அன்றைய ஆலோசனை கூட்டமும் பாதியில் முடிந்தது.
கட்சியில் இருக்கும் உட்கட்சி பூசல் இந்த இருவேறு சம்பவத்தின் மூலம் வெளியே வந்துவிட்டது, இப்படியே நீடித்தால் வரும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலில் அதிமுக என்ன நிலைக்கு செல்லும் என தெரியவில்லை இந்த சம்பவங்களால் என்னை போன்ற அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என பதிவு செய்தார்.
ஆர்எஸ்எஸ் அனுதாபியா அன்பழகன்?
மாட்டுச்சாணத்திலும் கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது’ – என அப்போதைய அறிவியல் திருவிழாக்களில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் அறிவு பூர்வமாகப் பேசிய வார்த்தைகள் இவை. அன்றைய அதிமுக தமிழக அமைச்சரவையில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகள்’ என்று பாராட்டப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோருடன் நெருக்கம் காட்டியதாலோ என்னவோ, கேபி அன்பழகன் இப்படி அறிவு பூர்வமாகப் பேசியிருக்கலாம் என முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே வக்காலத்து வாங்கினார்
மேலும் அன்று அன்பழகன் பேசியதற்கு காரணமும் இருக்கிறது அப்போது தர்மபுரியில் நடந்த ஆர்எஸ்எஸ் ஊர்வல கூட்டத்தில் கலந்துகொண்டு ஆர்எஸ்எஸ் வரலாற்றை துக்கி பிடித்தார். ரெய்டு மற்றும் ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே அன்று ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் நெற்றியில் அடித்த திலகம் தான் தற்போது வரை அதே கெட்டப்பில் வலம் வருகிறார் என்கிறார் அருகில் இருந்த மற்றொரு நிர்வாகி.
இரு சம்பவங்களின் நிகழ்வுகளை குறித்து , கருத்தறிய டிஆர் அன்பழகனை அழைத்தோம் எடுத்த எடுப்பிலேயே எங்கள் கட்சிக்குள் நடப்பதை வெளியே சொல்ல கூடாது என கூலாக கூறி தொடர்பை துண்டித்துக்கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் கூறியதாவது எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியதில் இருந்தே நான் கட்சியில் உறுப்பினராக உள்ளேன். நான் எப்போதும் ஒரே மாதிரியே எல்லாரையும் மதிக்கக் கூடியவன். இந்த கூட்டத்தில், மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என கூறினர்கள் .
இதை செய்ய வேண்டியது பொதுச் செயலாளரின் பணி. அதாவது, கேபி.அன்பழகன் பணி சரியில்லை என்றால், இரண்டு அல்ல மூன்றாகவே மாவட்டத்தை பிரிக்கலாம். என்னை எடுத்து விட்டு வேறு ஒரு நபரை மாவட்ட செயலாளராக போட்டால் கூட, நான் சாதாரண உறுப்பினராக இருந்து கடைசி வரை இயக்கத்திற்காக உழைப்பேன்.
பதவி சுகம் அனுபவித்து விட்டு, இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன். நான் எம்எல்ஏவாக இருந்த போது, என்னை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எடுத்தார்கள். ஆனாலும் எந்த கிராமங்களில் கட்சி நிகழ்ச்சி நடந்தாலும், நான் போய் கலந்து கொண்டுள்ளேன் என்றார்.
நேற்று நடந்த மோதலில் டி.ஆர்.அன்பழகனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர். கேபி அன்பழகன் ஆதரவாளர்கள் , இதற்கு கே.பி.அன்பழகன் அவனை நீக்க வேண்டும் என்றால் நீங்கள் பரிந்துரை கடிதம் கொடுக்க வேண்டும் என கூறி கடிதத்தை வாங்கி பெற்ற இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு நேற்றே செல்போன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் கட்சிக்கு அவப்பெயர் என்று கூறி கே.பி.அன்பழகன் தரப்பை சமாதானம் செய்துள்ளாராம் எடப்பாடி இதனால், தனது செல்வாக்கை பயன்படுத்தி டி.ஆர்.அன்பழகனுக்கு கட்டம் கட்ட கே.பி.அன்பழகன் காத்திருப்பதாகவும் கூறுகின்றனர் கேபி அன்பழகன் ஆதரவாளர்கள்
-கா. மணிகண்டன்