இலவசமாக ஹெல்மெட் கொடுத்து சத்தியம் வாங்கிய போலீஸ் கமிஷனர் !
இலவசமாக ஹெல்மெட் கொடுத்து சத்தியம் வாங்கிய போலீஸ் கமிஷனர் ! இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருப்பது தமிழகம் முழுவதும் கட்டாய மாக்கப்பட்டிருக்கிறது. என்னதான் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அபராதங்களை விதித்தாலும், தலைகீழாக நின்றாலும் ஹெல்மெட் அணியமாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஆசாமிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்நிலையில், மதுரையிலிருந்து தேனி செல்லும் முடக்கு சாலை சந்திப்பில் புதியதாக தானியங்கி சிக்னலை திறந்து வைப்பதற்காக வந்திருந்தார், மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன்.
சிக்னலை திறந்து வைத்த கையோடு, அவ்வழியே தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் கடந்து செல்வோரை வழிமறித்து, ”ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தை இயக்க மாட்டேன்” என்பதாக சத்தியம் வாங்கியிருக்கிறார். உபதேசம் செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தனது சொந்த செலவில் அவர்களுக்கு ஹெல்மெட்களையும் வாங்கிக் கொடுத்து மதுரை வாசிகளிடம் சபாஷ் வாங்கியிருக்கிறார் கமிஷனர் லோகநாதன்.
ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.