பச்சை மகரத் தீவு சிவப்பு நிறமாகியது-இலங்கை – புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க!

0

லங்கையில் கடந்த 21ஆம் நாள் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க (56) வெற்றி பெற்றிருப்பதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (23.09.2024) இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள காலிமுகத் திடலில் அநுர குமார திசாநயக்க புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தெற்காசியாவில் முதன்முறையாக இடதுசாரி சிந்தனை கொண்ட ஆட்சி முதல்முறையாக இலங்கையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். அநுரவின் பதவியேற்பு விழாவையொட்டி இலங்கையின் பல பகுதிகளில் சிவப்பு கொடி ஏந்திய பேரணிகள் நடைபெற்றன. பச்சை மகரத் தீவு முதன்முறையாக சிவப்பு நிறமாகி ஜொலித்துக்கொண்டிருக்கின்றது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

அநுர குமார திசாநாயக்க 1968 நவம்பர் 24-இல் இலங்கையின் தம்புத்தேகமவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு தொழிலாளி, அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. அவர் உள்ளூர் பாடசாலைகளில் பயின்றார் மற்றும் அவரது கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்ற முதல் நபர் ஆவார். திசாநாயக்க தனது பாடசாலை ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியில் (JVP) ஈடுபட்டதோடு, 1987-1989 ஜே.வி.பி கிளர்ச்சியின்போது அரசியலில் முழுமையாக ஈடுபட்டார். ஆரம்பத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்த அவர், பின்னர் 1995இல் களனி பல்கலைக்கழகத்தில் இயல்பியலில் பட்டம் பெற்றார்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

அநுர குமார திசாநாயக்க ஜே.வி.பி.யின் பதவிகளில் இருந்து உயர்ந்து, கட்சியின் தலைமைத்துவத்தில் ஒரு முக்கிய புள்ளியாக ஆனார். 1995ல் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழுவிலும் இணைந்துகொண்டார். 1998ல் அவர் ஜே.வி.பி.யின் அரசியற் குழுவில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றார். இந்த நேரத்தில், ஜே.வி.பி சோமவன்ச அமரசிங்கவின் கீழ் பிரதான அரசியலில் மீண்டும் நுழைந்தது மற்றும் ஆரம்பத்தில் சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தை ஆதரித்தது, இருப்பினும் அவர்கள் விரைவில் அவரது நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தனர்.

2004-இல், திசாநாயக்க ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அமைச்சரானார், விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசனத்தை கையாண்டார். ஆனால், 2005இல், அவரும் ஏனைய ஜே.வி.பி. அமைச்சர்களும் சுனாமி நிவாரண ஒருங்கிணைப்புக்காக அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இராஜினாமா செய்தனர். திசாநாயக்க 2014-இல் சோமவன்ச அமரசிங்கவுக்குப் பிறகு ஜே.வி.பியின் தலைவரானார். மேலும் 2019 இல் ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு, மூன்றாவது இடத்தைப் பிடித்தார். தேசிய மக்கள் சக்தியின் (NPP) கீழ் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவித்தார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான விமர்சன நிலைப்பாட்டிற்காக அறியப்பட்ட திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்த்து, மக்கள் சம்பாதிக்கும்போது செலுத்தும் வரி போன்ற வரிகளை குறைப்பதற்கும் அத்தியாவசிய பொருட்கள் மீதான VAT வரியை அகற்றுவதற்கும் குரல் கொடுத்தார்.

இலங்கையில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக மக்கள் புரட்சி வெடித்தது. அந்தப் புரட்சியை முன்னின்று நடத்தியவர் அநுர என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். கடந்த தேர்தலில் 3% வாக்குகளைப் பெற்ற அநுர இந்தத் தேர்தலில் 55.89% வாக்குகளைப் பெற்றி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

தெற்காசியாவில் முதல்முறையாக இடதுசாரி சிந்தனைகொண்ட ஒர் அரசு ஏற்பட்டிருக்கின்றது. அநுர சீனா ஆதரவு பெற்றவர் என்றும் கூறப்படுகின்றது. இதனால் இந்தியா சஜித் பிரேமதாசவை ஆதரித்தது. இதனால் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அநுரவைவிட சஜித் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றிருந்தார். அநுரவின் வெற்றி இந்திய – இலங்கை உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அமைந்துள்ள ஆட்சி கடந்த காலத் தவறுகளை மேலும் செய்வதைத் தவிர்த்து நேர்மை, வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்வாங்குதல் போன்றவற்றால் வழிநடத்தப்படுவதை உறுதி செய்யும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் பொருளாதரத்தால் சீர்குலைந்த இலங்கையைத் தூக்கி நிறுத்துவது எங்களின் முதல் பணி என்று பதவியேற்புக்குப் பின் அநுர கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையின் இளம் புதிய அதிபர் நாட்டை வளமாக்கவும் ஈழத்தமிழர் மற்றும் மலையகத் தமிழர் நலன் பேணவும் வாழ்த்துவோம்.

 

-ஆதவன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.