திருச்சியில் ஆன்லைன் லாட்டரி வியாபாரி அதிரடி கைது !
திருச்சியில் ஆன்லைன் மூலம் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பணையில் ஈடுபட்ட நபரை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
வாத்தலை முசிறி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல நாட்களாக லாட்டரி விற்பணையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், எஸ்.பி.வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர்.
கரளாவழி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் கணேசன் என்பவர், செல்போன் மூலமாக ஆன்லைன் லாட்டரி விற்பணையில் ஈடுபட்டு வந்ததை போலீசாரின் விசாரணையில் கண்டறிந்தனர். ஆமூர் கடைவீதியில் லாட்டரி விற்பணையில் ஈடுபட்டிருந்தபோது, தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
லாட்டரி விற்பணையில் ஈடுபட்டதாக கணேசன் இப்போதுதான் முதல்முறையாக கைதாகியிருக்கிறார் என்றும் இவருக்கு பின்னணியில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாநகரில் லாட்டரி சீட்டு விற்பணையில் ஈடுபடும் கும்பலை கமிஷனர் காமினி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்திருந்தார்கள். இந்நிலையில், மாநகரை விட்டு புறநகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பணையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறத
– அங்குசம் செய்தியாளர்.