அங்குசம் சேனலில் இணைய

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் Carbine பிாிவில் மத்திய மண்டலம் முதல் இடம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மாநில அளவிலான காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியானது சென்னை ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி தளத்தில் 26.09.2024 முதல் 28.09.2024 வரை நடைபெற்றது.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிாிவுகளாக நடைபெற்றது. மாநில அளவில் 9 மண்டலங்களாக பிாிக்கப்பட்டு நடைபெற்ற இப்போட்டியில். தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் கலந்து கொண்டனா்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அதில் ஆண்கள் பாிவில் 250 போட்டியாளர்களும், பெண்கள் பிாிவில் 200 போட்டியாளர்களும் கலந்துகொண்டனர். மத்திய மண்டலத்திலிருந்து

ஆண்கள் பாிவில் 27 போட்டியாளர்களும், பெண்கள் பிாிவில் 17 போட்டியாளர்களும் கலந்துகொண்டனர்.  இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில் மத்திய மண்டலம் இரண்டாம் இடத்தையும், ஆண்கள் Carbine பிாிவில் முதல் இடத்தையும், Revolver பிாிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இப்போட்டியில் கலந்து கொண்ட மத்திய மண்டல காவல்துறை அணியினர் சிறப்பாக செயலாற்றி முருகானந்தம், சிறப்பு உதவி ஆய்வாளர்- 1 தங்கம் மற்றும் 2 வௌ்ளி, பாலமுருகன், தலைமை காவலர் – 1 தங்கம்,  ரஞ்சித், முதல்நிலை காவலர் – 1 தங்கம்,  தினேஷ், முதல்நிலை

காவலர் – 1 வெண்கலம்,  சுந்தரலிங்கம், முதல்நிலை காவலர் – 1 தங்கம்மற்றும் 1 வௌ்ளி,  திலீபன், காவலர் – 3 தங்கம்,  சிவசக்திகுமார்,

காவலர் – 1 வௌ்ளி, செல்வி. சோயியா லாரன்ஸ், பெண் காவலர் – 1 தங்கம், 2 வௌ்ளி மற்றும் 1 வெண்கலம் மற்றும் சங்கீதா, பெண் காவலர் – 1 வௌ்ளி ஆக மொத்தம் 8 தங்கம், 7 வௌ்ளி, 2 வெண்கலப்பதக்கமும் மற்றும் 3 கேடயமும் பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் கலந்து கொண்டவா்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் மத்திய மண்டல காவல்துறைக்கு பெருமை சோ்த்த

காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்  க. கார்த்திகேயன், IPS., அவர்கள் பாிசுகளை வழங்கி வாழ்த்து தொிவித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.