மதுரை அமெரிக்கன் கல்லூரியில் “நிதி கல்வியறிவு” கருத்தரங்கு !
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் “நிதி கல்வியறிவு” கருத்தரங்கு ! மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள வணிகவியல் துறையில் நிதி கல்வியறிவு என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது கல்லூரியின் துணை முதல்வரும், வணிகவியல் துறையின் தலைவருமான மார்ட்டின் டேவிட் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் டாக்டர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையுரையாற்றினார் இந்தியன் வங்கியின் உதவி பொது மேலாளரும் துணை மண்டல மேலாளருமான பசுபதி சிறப்புரையாற்றினார்.
கருத்தரங்கில் பெண்கள் அதிகாரம் மற்றும் ஸ்டார்ட் அப்களை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். பின்னர் சாமானியர்கள் மட்டுமின்றி தொழில்முனைவோரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் கடன் வசதியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் இதில் கல்லூரி பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
– ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.