ஜில்லுன்னு சினிமா- தீபாவளி படங்கள்! தப்பிச்சது யார்? மாட்டியது யார்? வீடியோ !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ந்த தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’, ’ப்ளெடி பெக்கர்’ ‘லக்கி பாஸ்கர்’ என நான்கு படங்கள் ரிலீசாகின. ராஜ்கமல் பிலிம்ஸுடன் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த ‘அமரன்’ படத்தின் பட்ஜெட் 100—130 கோடி. பட ரிலீசுக்கு முன்பே சேட்டிலைட், ஓடிடி. ஆடியோ ரைட்ஸ் இந்த வகை வியாபாரம் மூலம் மட்டுமே கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் வந்துவிட்டதாம்.

skஅக்.31—ஆம் தேதி ரிலீசாகி, ஏழு நாட்கள் கடந்தும் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக போய்க் கொண்டிருப்பதால், தமிழ்நாடெங்கும் ரிலீஸ் பண்ணிய ரெட் ஜெயண்ட் மூவிஸும் தியேட்டர் ஓனர்களும் செம ஹேப்பி. இரண்டாவது வாரத்தில் உலகம் முழுவதும்  கிட்டத்தட்ட 250 கோடியை நெருங்கிவிடும் என்பதால், தயாரிப்பாளர் கமல்ஹாசன், ஹீரோ எஸ்.கே., டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் வெரிகுட் ஃபீல் மூடில் இருக்கிறார்கள்.

அங்குசம் இதழ்..

சுமார் 20 கோடி பட்ஜெட்டில் தயாரான ‘பிரதர்’ படம், தியேட்டர்களில் படுஃபிளாப்பாகிவிட்டதால், தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் பண்ணிய ஐங்கரன் மூவிஸ் கருணாமூர்த்தி தான் மாட்டிக்கிட்டார்.

raviஆனால் தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகமோ, சேட்டிலைட், ஓடிடி வகையில் படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசித் தொகையை கலெக்ட் பண்ணிவிட்டார். இந்த அட்வான்ஸ் கலெக்‌ஷன் கைகொடுத்ததால் தான், அடுத்த படத்திற்கும் ஜெயம் ரவி கால்ஷீட்டை வாங்கி வைத்திருக்காராம். இந்த கால்ஷீட்டிற்கு அட்வான்ஸாக ஈசிஆர் ரோட்டில் காஸ்ட்லியான ஃப்ளாட் ஒன்றை ஜெயம் ரவிக்குக் கொடுத்துள்ளாராம் பில்டரான சுந்தர் ஆறுமுகம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

வீடியோ லிங்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

டைரக்டர் நெல்சன் தயாரித்த ‘ப்ளடி பெக்கர்’ வினியோக உரிமையை வாங்கிய ஃபைவ் ஸ்டார் செந்திலின் நிலைமை தான் ‘ரியல் பெக்கர்’ அளவுக்குப் போய்விட்டது. படம் ரிலீசான மறுநாளே முக்கால்வாசி தியேட்டர்களில் ஒரே ஒரு ஷோ தான். மூன்றாவது நாள் அதுவும் போச்சு. “என் நிலைமை இப்படி ஆகிப்போச்சே… அம்மா தாயே ஏதாவது பிச்சை  போடுங்கம்மா…” ங்கிற அளவுக்கு  பரிதாப செந்திலாகிவிட்டார் ஃபைவ் ஸ்டார் செந்தில். ஆனால் நெல்சனோ சேட்டிலைட் & ஓடிடி வகையில் செமத்தியாக சேஃப்டியாகிவிட்டார்.

kavin‘பிரதர்’—ம் ‘ப்ளடி பெக்கர்’—ம் மண்ணைக் கவ்வியதால், ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு செமத்தியாக லக்கி அடித்த உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள் துல்கர் சல்மானும் தமிழ்நாடு ரிலீஸ் ரைட்சை வாங்கிய ‘ராக்ஃபோர்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் முருகானந்தமும்.

தியேட்டர்களும் காட்சிகளும் அதிகரித்ததால், இரண்டாவது வாரத்திலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது ‘லக்கி பாஸ்கர்’. கண்டெண்டும் திரைக்கதையும் வலுவாக இருந்தால் தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்பதை உணர்ந்த  துல்கர் சல்மானும் படத்தின் டைரக்டர் வெங்கி அட்லூரியும் ”வி ஆர் லக்கிமென்” என உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார்களாம்.

dulquarதனது ‘ராக்ஃபோர்ட்’ பேனரில் எடுத்த படங்கள் அம்புட்டும் மண்ணைக் கவ்வியதால், நொடித்து நொம்பலப்பட்டுப் போனது மட்டுமல்லாமல், மிஷ்கின் டைரக்‌ஷனில் ‘பிசாசு—2’ வை எடுத்து முடித்து நான்கு வருடங்களுக்கு மேலாகியும் ரிலீஸ் பண்ண முடியாமல் பாடாய்படுகிறார் முருகானந்தம். இனிமேல் அந்தப் படம் ரிலீசானாலும் பத்து பைசாவுக்குப் பெறாது என்ற முடிவுக்கு வந்துவிட்ட முருகானந்தம் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துத் தான் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை இரண்டரை கோடிக்கு  வாங்கினாராம்.

இரண்டாவது வாரத்தில் எப்படியும் ஆறு கோடியை நெருங்கிவிடும் என்ற நம்பிக்கை வந்திருப்பதால், முருகானந்தம் இப்போது முழு ஆனந்தத்தில் இருக்காராம்.

–மதுரை மாறன்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.