‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ வெப்சைட்டை துவங்கி வைத்தார் பிரபாஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தெலுங்கு மாஸ் ஹீரோ  பிரபாஸ், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ என்ற இணையதளத்தை துவங்கி வைத்தார். பல தரப்பட்ட கதைகள் வெளிச்சத்திற்கு வரவும், எழுத்தாளர்கள் தங்கள் கதை சார்ந்த  கருத்துக்களை பரந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், ஒரு  சிறப்பான தளத்தை வழங்குவதற்காக,  இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்கிரிப்ட் கிராஃப்ட்  தளத்தில் எழுத்தாளர்கள் தங்கள் கதைக்கருக்களை 250-சொற்களில் சுருக்கமாக சமர்ப்பிக்கலாம்.  பார்வையாளர்கள்  இதைப்படித்து  மதிப்பிடலாம்.அதிக ரேட்டிங் பெற்ற கதைகள் மேலே உயரும். எழுத்தாளர்கள் நம்பிக்கையை வளர்க்கவும் அவர்களின் கருத்துக்களுக்கு நேர்மறையான ஆதரவைப் பெறவும் உதவும் ஒரு ஆக்கபூர்வமான சூழலை  இந்த தளம் உருவாக்குகிறது.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம் துவக்கத்தை கொண்டாடும் விதமாக

 'The Script Craft' “உங்களுக்குப் பிடித்த ஹீரோவை சூப்பர் பவருடன் கற்பனை செய்து கதை சொல்லுங்கள் !” என்ற தலைப்பில் எழுத்தாளர்களுக்கு ஒரு சிறப்புப் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த கதைக்கரு அதிகபட்ச 3,500-வார்த்தைகள் கொண்டதாக சமர்ப்பிக்க, எழுத்தாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இறுதியில், இந்த போட்டியில் ரசிகர்களின் ஆதரவை அதிகமாக பெறும் வெற்றியாளர்  உதவி எழுத்தாளராக அல்லது உதவி இயக்குநராக ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவதற்கான தனித்துவமான வாய்ப்பைப் பெறுவார்.  இது வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.  தல்லா வைஷ்ணவ் மற்றும் பிரமோத் உப்பளபதி ஆகியோரால் நிறுவப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளம், புதிய திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், எழுத்தாளர்களுக்கு அவர்களின் கதை சொல்லும் திறனையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்குகிறது.

பிரபாஸ்கூடுதலாக, தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளம் ஆடியோபுக்ஸ் அம்சத்துடன் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை ஆடியோ அனுபவங்களாக மாற்ற இது அனுமதிக்கிறது. ஆடியோ கதை சொல்லலை விரும்பிக் கேட்போர் உட்பட, எழுத்தாளர்கள் பரந்த பார்வையாளர்களை அடைய உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளதாவது.., “இந்த மேடையில் உங்கள் கதையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.உங்களை ஊக்குவிக்க சிறப்பான வழியாக இதைப் பயன்படுத்திகொள்ளுங்கள். எழுத்தாளர்களின் வார்த்தைகளை பார்வையாளர்கள் தங்கள் விருப்பத்தின் மூலம் மேம்படுத்துவார்கள். இந்த தளத்தில் அனைவரும் இணையுங்கள். #TheScriptCraft குழுவிற்கு வாழ்த்துகள்.”

 

— மதுரை மாறன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.