அங்குசம் சேனலில் இணைய

மூன்றாண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட கணவர் ! கந்துவட்டி புகாரில் மாமனார் குடும்பம் ! குழந்தையை மீட்கப் போராடும் தாய் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ணவர் இறந்து விட்டதால், குழந்தையை பறித்துக் கொண்டு மாமனாரும் மாமியாரும் சேர்ந்து கொண்டு தனது குழந்தையிடமிருந்து தன்னை பிரித்து துன்புறுத்தி விரட்டியடித்துவிட்டதாக அக்குழந்தையின் தாயார் தேனி போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை ரங்கநாதபுரம் மேலத்தெருவை சேர்ந்த கார்த்திக் மனைவி விமலா தேவி (29).  உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் இறந்து விட்டார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இதனால் கைக்குழந்தை சஜித் கார்த்திக் (3) உடன் மாமியார், மாமனார் நாத்தனார் கௌசல்யா, ரங்கராஜன் உள்ளிட்ட நான்கு பேருடன் விமலா தேவி வசித்து வந்தார்.

இந்த நிலையில் கோம்பை பகுதியில் உள்ள ஏராளமான அப்பாவி பொதுமக்களிடம் வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களுடைய பத்திரங்களை அபகரித்துக் கொண்டதாக கோம்பை காவல்துறையினர் மாமனார் சுருளி, மாமியார் பால் தாய் நாத்தனார் கெளசல்யா, கணவர் ரெங்கராஜன், என்னையும் சேர்த்து ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதனால் வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாற்றியவர்களின் பத்திரங்களை திரும்ப ஒப்படைக்குமாறு எனது குடும்பத்தாரிடம் தெரிவித்தேன்.

இதனால் ஆத்திரமடைந்த எனது குடும்பத்தினர் என்னுடைய குழந்தையை பறித்துக் கொண்டு,  நகைகள், கல்வி சான்றிதழ்கள், ஆதார் , குடும்ப அட்டை, பறித்துக் கொண்டு அடித்து துன்புறுத்தி என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர்.

எனவே, தன்னுடைய குழந்தையை மீட்டுத் தருமாறு இன்று தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத்திடம் புகார் அளித்துள்ளார்.

 

–    ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.