நியோமேக்ஸ் : புகார் அளிக்க (நவம்பர் – 14) ஒருநாள் மட்டுமே அவகாசம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் : புகார் அளிக்க (நவம்பர் – 14) ஒருநாள் மட்டுமே அவகாசம் !
நியோமேக்ஸ் மோசடி வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி கடந்த அக்-19 அளித்திருந்த தீர்ப்பில், வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்கேற்ப சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தளித்திருந்தார். அதன்படி, நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து இதுவரை புகார் அளிக்காத முதலீட்டாளர்களுக்கு புகார் அளிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் நவம்பர் – 05 தொடங்கி, நவம்பர்- 15 மாலை 5.00 மணி வரையில் புகார் அளிக்க அவகாசம் வழங்கியிருந்தார்கள்.

இது தொடர்பாக, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் நவம்பர் -04 ஆம் தேதியன்று வெளியான தமிழில் தினத்தந்தி நாளிதழிலும் ஆங்கிலத்தில் தி இந்து நாளிதழிலும் அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. இந்த அறிவிப்பில், முதலீட்டாளர்கள் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும் என்பதற்கான மாதிரி புகார் படிவத்தையும் வெளியிட்டிருந்தார்கள்.

உலக சக்கரை நோய் தினம்

Neomax Team
Neomax Team

இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் தரப்பில் இப்போதும் முதலீட்டாளர்களை புகார் அளிக்கவிடாதபடி, பல்வேறு வகைகளில் தடுத்து வருவதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அறிவிப்பை யார் வெளியிடுகிறார்கள் என்ற விவரமே இல்லாமல், நிறுவனத்திற்கு ஆதரவான வாட்சப் மெசேஜ்கள் உலா வருகின்றன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அதில், போலீசில் புகார் அளித்தால் வழக்கு விசாரணை என்று இழுத்துக் கொண்டே செல்லும். நிறுவனத்தை நம்பி புகார் அளிக்காமல் இருந்தால், 2026 மார்ச் மாதத்திற்குள் நிறுவனம் செட்டில்மென்ட் செய்துவிடும் என்பது தொடங்கி, நீதிமன்றத்தில் வழக்கு என்று சென்றுவிட்டால் நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்று சொற்ப பணத்தையே கொடுப்பார்கள்; அதுவும் பல ஆண்டுகள் கழித்துதான் கொடுப்பார்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் மோசடியான முறையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் ஏஜெண்டுகள் வழியாக புகார்களை சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Neomax Team
Neomax Team

நியோமேக்ஸ் ஜூனியர் சிட்டிசன் இன்வெஸ்டார்ஸ் வெல் ஃபேர் அசோசியேஷன் – திருச்சி, நியோமேக்ஸ் சீனியர் சிட்டிசன் இன்வெஸ்டார்ஸ் வெல் ஃபேர் அசோசியேஷன் – திருச்சி என்ற பெயரில், liability form என்ற பெயரில் நூதனமான முறையில் புகாரை பெற்று வருகிறார்கள். மேலும், மாவட்ட வாரியாக சிறப்பு முகாம்களை நடத்தியும் இந்த புகாரை பெற்றிருக்கிறார்கள். மேற்படி, ”சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கிறோம்” என்ற பெயரில் இந்த மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்கள். ”போலீசில் புகார் கொடுத்தால் பணமும் கிடைக்காது. நிலமும் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், முழுத்தொகையும் கிடைக்காது. அதுவும், காலம் கடந்து பல ஆண்டுகள் கழித்தே கிடைக்கும். போலீசு கொடுக்க சொன்ன புகாரை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் நிறுவனத்துடன் பேசி, செட்டில்மென்ட் வாங்கித் தருகிறோம்.” என்பதாக முதலீட்டாளர்களை ஏமாற்றி இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் நோக்கம், போலீசில் யாரும் புதியதாக புகாருக்கு சென்றுவிடக்கூடாது என்பதுதான்.

neomax company
neomax company

இந்த குறிப்பிட்ட சங்கம் தவிர்த்து, நேரடியாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆர்.எச், டீம் ஹெட் வழியாகவும் இதுபோல புகார்களை பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகவும் அந்தந்த முதலீட்டாளரின் மனநிலையை பொறுத்து மூளைச்சலைவை நடைபெற்றிருக்கிறது.

இதுஒருபுறமிருக்க, நீதிமன்றம் சொன்னபடி தினசரியில் விளம்பரம் வெளியிட்டுவிட்டோம். புகார் அளிப்பதும் அளிக்காமல் இருப்பதும் முதலீட்டாளரின் பொறுப்பு என்பதாக, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பிலும் அமைதி காத்து வருகிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதிலும் குறிப்பாக, ஏற்கெனவே புகார் அளித்தவர்கள் மீண்டும் தற்போதைய புதிய பார்மேட்டில் புகார் அளிக்க வேண்டுமா? ஏற்கெனவே, புகார் அளித்து சி.எஸ்.ஆர். நகல் கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புகார் அளிக்க வேண்டுமா? முதிர்வு நாள் முடிந்து கணக்கு முடிப்பதற்காக நிறுவனத்திடம் ஒரிஜினல் பாண்டுகள் கையளிக்கப்பட்டுவிட்ட நிலையில் அதன் நகல் கூட இல்லாதவர்கள் எவ்வாறு புகார் அளிப்பது? அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் புகார்களுக்கும் நவம்பர் 15 ஆம் தேதிதான் கெடுவா? அல்லது நவம்பர் 15 ஆம் தேதியன்று அஞ்சல் செய்யப்படும் புகார்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா? என்பது போன்ற சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்கும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தயாராக இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

நியோமேக்ஸ் நிறுவனத்தின் மோசடியான புகார் பெறும் நடவடிக்கை குறித்தும், முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள குழப்பங்களை போக்கும் வகையிலும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் தரப்பிலிருந்து பத்திரிகை செய்தியாகக்கூட, வெளியிட முடியாத அளவிற்கு அழுத்தத்தில் இருக்கிறார்களா, என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, வேலைப்பளு காரணமான அழுத்தமா? மேலிடத்து அழுத்தமா என்ற துணைக்கேள்விகளும் கூடவே, எழுகிறது.

neomax - Md
neomax – MD

நியோமேக்ஸ் மோசடி தொடர்பாக மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், முன்னணி இயக்குநர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் நிபந்தனை பிணையில் வெளிவந்துமிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வளவுக்கு மத்தியிலும், இதுவரை புகாருக்கு செல்லாத, முதலீட்டாளர்களை அழைத்து, “உன்னிடம் மூன்று இலட்சம் ரூபாய்க்கு பாண்டு இருக்கிறதா? அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ மேலும் இன்னொரு மூன்று இலட்சம் எடுத்து வா. உனக்கு ஆறு இலட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தை எழுதித் தருகிறேன்.” என்று வெளிப்படையாகவே பிசினஸ் பேசிவருகிறார்கள் என்பது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பா, இல்லையா? இன்னொரு கோணத்தில், பார்த்தால் நியோமேக்ஸ் நிறுவனம் புகாரில் சிக்கிய மோசடியைவிட, பல மடங்கு கிரிமினல் தன்மை நிறைந்த மோசடி இது.

சதுரங்க வேட்டை திரைப்படத்தில், யாருடைய பேச்சும் பாம்பின் காதுகளுக்கு எட்டிவிடாதபடிக்கு பாதுகாப்பாக வைக்கச் சொல்லியும் அதன்படி செய்யாத செட்டியாரின் அலட்சியம் மற்றும் தவறின் காரணமாகத்தான், மண்ணுளிப் பாம்பின் எடை குறைந்து போய்விட்டது என்பதாக சொல்லி, மீண்டும் அதனை சரிபடுத்துவதற்காக சிறப்பு மருத்துவரை அழைத்து வருகிறேன் என்று சொல்லி மேலும் இரண்டு இலட்சத்தை ஆட்டையப் போட்டிருப்பார்கள். செட்டியாரும், நம்பி இறங்கிவிட்டோம். கோடியில் வந்து கொட்டப்போகிறது. இரண்டு இலட்சம்தானே, எடுத்து கொடுப்போம் என்று மோசடிக்காரர்களின் மகுடிக்கு ஆடும் பாம்பாகவே மாறி பணத்தை கொடுத்து ஏமாந்திருப்பார். அதுபோலவே, நியோமேக்ஸை நம்பி முதலீடு செய்த முதலீட்டாளர்களையெல்லாம் செட்டியார் கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறது, நியோமேக்ஸ்.

NeoMax
NeoMax

மொத்த முதலீட்டாளர்களின் விவரங்களையும், அவர்களிடமிருந்து வசூலித்த தொகை குறித்த விவரங்களையும், அதிலிருந்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக வாங்கிப்போட்ட சொத்துக்களின் விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டு, அதிலிருந்து நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மொத்த முதலீட்டாளர்களுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தித்தர நியோமேக்ஸ் நிறுவனம் ஏன் முன்வரமாட்டேன் என்கிறது? திரும்பத் திரும்ப சட்டவிரோதமான வழிமுறைகளையே நாடி ஏன் செல்கிறது? என்பதுதான் விடை காண முடியாத மர்மமாகவே நீடித்து வருகிறது.

இதிலிருந்து, நியோமேக்ஸ் நிறுவன மோசடியின் முழுப்பரிமாணத்தையும் இன்னும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரும் நீதிமன்றமும் அரசும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறதா? இல்லை, ஏதோ ஒரு தலையீடு அல்லது அழுத்தம் காரணமாக, அதன் போக்கில் போகட்டும் என்று கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறதா? என்பதையும் நம்மால் விளங்கிக் கொள்ளவும் முடியவில்லை.

இவை ஒருபுறமிருக்க, தற்போதைய நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் புகார் அளிப்பதற்காக கடைசி தேதி நவம்பர் 15. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மிச்சம் இருக்கிறது. நேரில் புகார் அளிப்பதற்குத்தான் கெடு தேதி, நவம்பர் – 15. அஞ்சலில் அனுப்புவதாக இருந்தால், நவம்பர்-14 ஆம் தேதி மாலைக்குள் அஞ்சல் செய்தால் மட்டுமே அடுத்தநாள் புகார் சென்று சேரும்.நியோமேக்ஸ் மனுமேளா

நீதிமன்றம் புகார் அளிக்க வாய்ப்பு கொடுத்தும் அதனை தடுக்கும் வகையில் நியோமேக்ஸ் நிறுவனம் செயல்பட்டிருப்பது, ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ள நிலையில், நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் எந்தவிதமான அழுத்தத்திற்கும் ஊசலாட்டமான மனநிலைக்கும் ஆளாகாமல் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில், இந்த விவகாரங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் அளிப்பதற்கான கால நீட்டிப்பை பெற்றுத்தருவார்களா, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார்?

– அங்குசம் புலனாய்வுக்குழு.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.